சென்னை கடற்கரை - சென்னை எழும்பூர் இடையே நான்காவது வழித்தடம் இணைப்பு பணிக்காக சென்னை கடற்கரை - சேப்பாக்கம் பறக்கும் ரயில் சேவை 7 மாதங்களுக்கு ரத்து ?




சென்னை மாநகர் பெரும்பாலும் பரபரப்பாகவே இயங்கிக் கொண்டிருக்கும். மேலும் சென்னையில் அதிக நிறுவனங்கள் உள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெரும்பாலானூர் பணிக்காக இங்கு வந்து தங்கி வேலை செய்து வருகின்றனர். அதனால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகமானதால் அதனை குறைக்கும் வகையில் கொண்டுவரப்பட்டது தான் மின்சார ரயில் சேவை.



அதிலும் சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரயிலாக அந்த ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. மேலும் தாம்பரம், செங்கல்பட்டு போன்ற இடத்தில் இருந்தும் சென்னை கடற்கரைக்கு மின்சார ரயில்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே உள்ள பறக்கும் ரயில் நிலையங்களை சுற்றி 30 கிலோமீட்டர் சென்னை மாநகராட்சி மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தது.

ஏற்கனவே வேளச்சேரி - பரங்கிமலை பகுதியை இணைக்கும் வகையில் பறக்கும் ரயில் திட்ட பணிகள் நடைபெற்ற வருகின்றன. அந்த பறக்கும் ரயில் சேவையை மெட்ரோ ரயிலுடன் இணைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே நான்காவது வழித்தடம் அமைக்கப்பட்ட பிறகு தான் பறக்கும் ரயில் சேவை மெட்ரோ ரயில் உடன் இணைக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பறக்கும் ரயில் நிலையங்களை மறு சீரமைப்பு செய்து மெட்ரோ ரயில் நிலையங்கள் போல் மாற்ற சிஎம்டிஏ முடிவு செய்துள்ளது.

சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே நான்காவது வழித்தடத்தை ரயில்வே வாரிய இலக்கிற்கு ஏற்ப ஜனவரி 2024 ஆம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக சென்னை கடற்கரை - சேப்பாக்கம் வரை பறக்கும் ரயில் சேவையை ரத்து செய்ய முன்மொழியிப்பட்டது.

சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற உள்ளதால், சென்னை கடற்கரை - சேப்பாக்கம் இடையே பறக்கும் ரயில் சேவை 7 மாதங்கள் ரத்து செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை சென்ட்ரலில் இட நெருக்கடி நிலவுவதால் பலவிரைவு ரயில்கள் எழும்பூரில் இருந்து இயக்கப்படுகின்றன. எனவே, ரயில் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது.

இதற்காக கடற்கரை - சேப்பாக்கம் இடையே பறக்கும் ரயில் சேவை வரும் ஜூலை 1-ம் தேதி முதல் 2024 ஜன.31-ம் தேதி வரை 7 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments