இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ரயில்வே கோரிக்கைகளை முன்வைத்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர் கே சிங் அவர்களுடன் நவாஸ்கனி எம்பி சந்திப்பு
 விருதுநகர் மாவட்டம் நரிக்குடி மற்றும் திருச்சுழி, இராமநாதபுரம், பரமக்குடி, மண்டபம், மற்றும் சூடையூர், சத்திரக்குடி, வாலாந்தரவை, மண்டபம் கேம்ப் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயில்கள் நின்று செல்வது உள்ளிட்ட இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ரயில்வே கோரிக்கைகளை முன்வைத்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர் கே சிங் அவர்களுடன் நவாஸ்கனி எம்பி சந்திப்பு.,

ராமேஸ்வரம் - சென்னை ரயில் பெட்டிகளை புதிய பெட்டிக்களாக மாற்றுவது, 

கோரோனா பொது முடக்கத்திற்க்கு முன்பு இயக்கப்பட்ட அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்குவது,

ராமேஸ்வரம் வரையிலான புதிய ரயில்களை இயக்குவது,

அறந்தாங்கி பகுதிக்குட்பட்ட ரயில்வே கோரிக்கைகள்.,

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே நவாஸ்கனி எம்பி தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர் கே சிங் அவர்களை சந்தித்து வலியுறுத்தினார்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு நவாஸ்கனி எம்பி அளித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது.,

இராமநாதபுரம், பரமக்குடி, மண்டபம், மற்றும் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி மற்றும் திருச்சுழி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ரயில்கள் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.,

சிலம்பு விரைவு வண்டி (16181/16182) இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சுழி சட்டமன்ற தொகுதி நரிக்குடி அல்லது திருச்சுழி ரயில் நிலையத்தில் நிறுத்தம்,

இராமேஸ்வரம் - திருச்சி பயணிகள் வண்டி சூடையூர், சத்திரக்குடி, வாலாந்தரவை மற்றும் மண்டபம் கேம்ப் ரயில் நிலையங்களில் நிறுத்தம்,

கன்னியாகுமரி -  இராமேஸ்வரம் விரைவு வண்டி மண்டபம் மற்றும் பரமக்குடி ரயில் நிலையங்களில் நிறுத்தம்,

ராமேஸ்வரம் விரைவு வண்டி மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தம்,

இராமேஸ்வரம்- சென்னை சேது விரைவு வண்டி மண்டபம் ரயில்நிலையத்தில் நிறுத்தம்,

இராமேஸ்வரம் - அஜ்மீர் (20973/20974) தொடர்வண்டி இராமநாதபுரம் மற்றும் பரமக்குடியில் நிறுத்தம்,

இராமேஸ்வரம் - அயோத்தியா (22613/22614) தொடர்வண்டி இராமநாதபுரம் மற்றும் பரமக்குடியில் நிறுத்தம்,

இராமேஸ்வரம் - பனாரஸ் (22535/22536) தொடர்வண்டி இராமநாதபுரத்தில் நிறுத்தம்,

உள்ளிட்ட ரயில்களை குறிப்பிடப்பட்டுள்ள ரயில் நிலையங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு இயக்கப்படும் ரயில் பெட்டிகள் மிகவும் பழைய பெட்டிகளாக இருப்பதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

ரயில் பெட்டிகளை மாற்றி புதிய பெட்டிகளாக அமைக்க நெடு நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

எனவே சென்னை - ராமேஸ்வரம் இயக்கப்படும் ரயில் பெட்டிகளை மேம்படுத்தப்பட்ட புதிய பெட்டிகளாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இராமநாதபுரம் மற்றும் பரமக்குடி ரயில் நிலையங்களில் ரயில் பெட்டிகளின் அறிவிப்பு பலகை இல்லாமல் இருப்பதால் பயணிகள் தங்களுடைய இருக்கை இருக்கும் பெட்டிகளை அறிந்து கொள்வதில் பெரும் சிரமத்தை சந்திக்கிறார்கள்.

எனவே அறிவிப்பு பலகைகள் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி மக்கள் அறந்தாங்கி வழியாக கூடுதலாக ரயில்களை இயக்க தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

சென்னையிலிருந்து அறந்தாங்கி வழியாக காரைக்குடிக்கு விரைவு வண்டி இயக்க வேண்டும்,

சென்னையில் இருந்து காரைக்குடி வரை இயக்கப்படும் பல்லவன் விரைவு வண்டி அறந்தாங்கி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் அல்லது காரைக்குடியிலிருந்து அறந்தாங்கி வரை இணைப்பு ரயில் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அறந்தாங்கி பகுதியிலிருந்து பொதுமக்கள் திருவாரூர் மற்றும் காரைக்குடி ரயில் நிலையங்களுக்கு அதிகம் பயணிக்க கூடியவளாக இருக்கிறார்கள்.

எனவே அறந்தாங்கி வழியாக திருவாரூர் மற்றும் காரைக்குடி ரயில் நிலையங்களை இணைக்கும் வண்ணம் கூடுதலாக ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அறந்தாங்கி பகுதியில் ரயில்வே சரக்கு யார்ட்டு (Goods yard) அமைப்பது பராமரிப்பு பணிக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும். எனவே அறந்தாங்கி பகுதியில் ரயில்வே Goods yard அமைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

கொரோனா பொது முடக்க காலத்தில் நிறுத்தப்பட்ட அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமேஸ்வரம்- மதுரை பயணிகள் ரயிலை மூன்று முறை இயக்க வேண்டும்,

ராமேஸ்வரம்- கன்னியாகுமரி (22621/22622) இரு மார்க்கமும் உள்ளிட்ட ரயில்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் மீட்டர்கேஜ் முறையில் இயக்கப்பட்டு வந்த ரயில்களை பிராட் கேஜ் முறையில் மாற்றப்படும்போது நிறுத்தப்பட்டிருந்த வழித்தடங்களில் மீண்டும் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இராமேஸ்வரம்- கோயம்புத்தூர் இரு மார்க்கமும், 
ராமேஸ்வரம் - பாலக்காடு பயணிகள் வண்டி இரு மார்க்கமும், ராமேஸ்வரம் - திருச்சி இரவு நேர பயணிகள் வண்டி இரு மார்க்கமும் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் மக்களின் கோரிக்கையாக இருக்கும் சென்னை - ராமேஸ்வரம், ராமேஸ்வரம் - திருப்பதி அந்தியோதயா விரைவு வண்டிகளையும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

திருவனந்தபுரம் - மதுரை புனலூர் - பாலக்காடு ஆகிய விரைவு வண்டிகளை ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் இராமேஸ்வரம் திருப்பதி (16779/16780) விரைவு வண்டி அதிகமாக பக்தர்கள் பயன்படுத்தக்கூடிய வழித்தடமாக அளிக்கிறது.

தற்போது வாரம் மூன்று முறை இயக்கப்பட்டு வரும் இந்த வண்டியை தினசரி வண்டியாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் தற்போது வாரம் ஒருமுறை இயக்கப்பட்டு வரும் இராமேஸ்வரம் - ஓகா (16733/16734)
விரைவு வண்டியை வாரம் மூன்று முறை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் வட மாநிலங்களிலிருந்து ராமேஸ்வரத்திற்கு இயக்கப்படும் ரயில்களை மதுரை வழியாக இயக்கினால் கூடுதல் வருவாயை ஈட்டித்தரும்.

பொது மக்களும் அதிகம் அதன் மூலம் பயனடைய முடியும்.
எனவே மதுரை வழியாக விரைவு வண்டிகளை இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

காரைக்குடி முதல் கன்னியாகுமரி வரை தொண்டி, ராமநாதபுரம், கீழக்கரை,சாயல்குடி மற்றும் தூத்துக்குடி வழியாக புதிய பிஜி லைன் அமைக்க பரிசீலிக்க வேண்டும் வேண்டும்.

ராமநாதபுரம் ரயில் நிலையத்தின் எஸ்கலேட்டர் வசதியுடன் கூடிய கூடுதல் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி ரயில் நிலையத்தில் பயணிகளின் சிரமத்தை தவிர்க்கும் வண்ணம் டிஜிட்டல் கோச் இன்டிகேட்டர் வசதி செய்து தர வேண்டும்.

உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே நவாஸ்கனி எம்பி தெற்கு ரயில்வே பொது மேலாளரை சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments