முத்துக்குடாவில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா தளம் அமைக்க அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டு விழா!



முத்துக்குடாவில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா தளம் அமைக்க அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகே உள்ள கடற்கரை பகுதியான முத்துக்குடாவில் சுற்றுலா தலம் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக இருந்தது. அங்கு அலையாத்தி காடுகள் உள்ளன. படகு மூலம் சென்று அலையாத்தி காடுகளை சுற்றி பார்க்க ஏற்பாடு செய்யவும் வலியுறுத்தி வந்தனர்.

சுற்றுலா தளம் அமைக்க வேண்டும் என்று அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.இராமச்சந்திரன் சட்டமன்றத்தில் சிறப்பு கவனயீர்ப்பு கூட்டத்தில் உரையாற்றினார். இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் மூலம் முத்துக்குடா பகுதியை சுற்றுலா தலமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் முத்துக்குடா கடற்கரை பகுதியில் ரூ.3 கோடியில் சுற்றுலா தலம் அமைக்கப்படும் என சட்டசபையில் அறிவிப்பு வெளியானது. 

இந்த நிலையில் சுற்றுலா தலம் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது. கடற்கரையையொட்டி அருகில் உள்ள தரிசு நிலங்களில் சுற்றுலா தலம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. தற்போது 15 ஏக்கர் இடம் தேர்வு செய்து அதனை சுற்றுலாத்துறைக்கு வருவாய்த்துறை ஒதுக்கி உள்ளது. அதற்கான ஆணை வருவாய்த்துறையிடம் இருந்து வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் முத்துகுடாவில் சுற்றுலா தளம் அமைக்க 15 ஏக்கர் இடம் ஒதுக்கீட்டில் ரூ.3 கோடி செலவில் கட்ட நேற்று 15/05/2023 அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.இராமச்சந்திரன் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் ஆவுடையார்கோவில் ஒன்றிய துணைப் பெருந்தலைவர் பிரியா குப்புராஜா, மாவட்ட ஒன்றிய குழு உறுப்பினர் கே.கே.சி.ராமநாதன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட 50-க்கும் மேற்பட்ட ஊர் பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments