கோபாலப்பட்டிணம் அவுலியா நகரில் பொது வழி பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ஊர் ஜமாத்திடம் பொதுநல மனு அளித்த அவுலியா நகர் மக்கள்!



கோபாலப்பட்டிணம் அவுலியா நகரில் பொது வழி பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ஊர் ஜமாத்திடம் அவுலியா நகர் மக்கள் பொதுநல மனு அளித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் உள்ள கோபாலப்பட்டிணம் அவுலியா நகரில் சிலர் பொது வழி பாதையை ஆக்கிரமித்துள்ளததை அகற்றக்கோரி நேற்று 12/05/2023 வெள்ளிக்கிழமை ஜூம்ஆவிற்கு பிறகு ஊர் ஜமாத்தாரிடம் அவுலியா நகர் பொதுமக்கள் சார்பில் பொதுநல மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, 
கடந்த 01/07/2022 அன்று ஊர் ஜமாத்தார்களுக்கு அவுலியா நகர் பொதுமக்கள் சார்பில் கடிதம் கொடுத்தோம். சிலர் பொது பாதையை அடைத்து வைத்திருக்கிறார்கள் தொடர்பாக. நீங்கள் இரண்டு மாதம் கழித்து வந்து பார்த்து ஒரு இடத்தை மட்டும் அளந்து விட்டு சென்றீர்கள். மற்ற இடத்தை யார் அளப்பது? நீங்கள் அளந்த அந்த ஒரு இடத்தையாவது சரி செய்து தந்தீர்களா, இதுவரையும் அப்படியே தான் இருக்கிறது. பத்து மாதங்களுக்கு (315 நாட்கள்) மேல் ஆகிவிட்டது. முன்பு கொடுத்த கடிதமும் இணைக்கப்பட்டுள்ளது. ஊர் நன்றாக இருக்க வேண்டும் எண்ணத்தில் தான் நாங்கள் உங்களிடம் கூறுகின்றோம். ஆனால் நீங்கள் அதை கவனத்தில் எடுத்து கொள்ளவில்லை. ஊராட்சி மன்றம் தான் சரி செய்யவில்லை என்று மக்கள் ஊர் ஜமாத்தை நாடினால் நீங்களும் அதை தான் செய்கிறீர்கள்.மக்களாகிய நாங்கள் பொதுநலமாக செய்தால் நீங்கள் எங்கள் மீது பொய் புகார் கொடுக்கிறீர்கள். நாங்கள் என்ன தான் செய்வது உங்களுடன் எங்களை பயணிக்க சொல்கிறீர்களா? ஒரு  ஜனாஸாவை கூட எடுத்து செல்ல முடியவில்லை என்று கூறியும் நீங்கள் கவனத்தில் கொள்ளவில்லை. இந்த முறையாவது இரண்டு, மூன்று மாதம் தாமதம் படுத்தாமல் விரைவாக பொது பாதையை மீட்டு தரும்படி கேட்டு கொள்கிறோம்.

இவ்வாறாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு குறித்து ஊர் ஜமாத் நிர்வாகம் கூறுகையில் இரண்டு தலைவர்களில் ஒரு தலைவர் மற்றும் பொருளாளர் வெளியூர் சென்றிருப்பதால் வரும் வாரம் வெள்ளிக்கிழமை இந்த மனு ஊர் பெதுமக்கள் முன்னிலையில் வாசிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். 

கோபாலப்பட்டிணம் பகுதிகளில் முன்னர் ஒரே நேரத்தில் இரண்டு வேன்கள் எதிரெதிரே சென்று வரக்கூடிய நிலையில் சாலைகள் பறந்து விரிந்து காணப்பட்டது. ஆனால் இப்பொழுது உள்ள சூழ்நிலையில் ஒரு வேன் செல்வதற்கே வழியில்லாமல் பொது பாதைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு குறுகி காணப்படுகிறது. சில தெருக்களில் அவரச காலத்தில் ஆம்புலன்ஸ் மற்றும் ஆட்டோ கூட செல்ல முடியாத நிலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு ஜனாஸாவை கொண்டு செல்ல முடியாத அளவுக்கு பொது இடத்தை ஆக்கிரப்பு செய்துள்ளது கவலையளிப்பதாக உள்ளது. எனவே மீதம் இருக்கும் சில தெருக்களில் ஆக்கிரமித்து பொது இடத்தை அடைத்துவைத்திருப்பவர்களை ஊர் ஜமாத் நிர்வாகம் மெத்தனமாக இருந்து விடாமல் உடனடியாக தடுத்து நிறுத்தி பொது பாதையை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

பொது வழி பாதை ஆக்கிரமிப்புகளை சிலர் துணிந்து செய்து வந்தனர். அதற்கு முக்கிய காரணம் ஊர் ஜமாத் சார்பில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடத்திற்கு அபராதம் விதிக்கும் நடைமுறை இருந்து வருவதே சிலர் ஆக்கிரமிப்புகளை செய்து இப்பொழுது சாலைகள் குறுக காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சாலை குறுகி காணப்படுவதால் ஊராட்சி சார்பில் புதிதாக தார் சாலையோ, சிமெண்ட் சாலையோ அமைப்பதில் சிக்கல் இருந்து வருவது மட்டுமில்லாமல் அந்த திட்டம் நிறைவேற்ற முடியாத சூழல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments