அறந்தாங்கியில் உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி!



அறந்தாங்கி ஐஎம்எ, தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு இணைந்து பனிரெண்டாம் வகுப்பிற்கு பிறகு என்ன படிக்கலாம் எனும் உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

அறந்தாங்கி இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் தலைவர் மருத்துவர் ராமகிருஷ்ணன் தலைமையில் அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் விகாஸ் சரவணன், திசைகள் அமைப்பு பொருளாளர் முகமது முபாரக், ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்ராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

திசைகள் அமைப்பின் தலைவர் மருத்துவர் தெட்சிணாமூர்த்தி தொடக்க உரையாற்றினர். மருத்துவம் பற்றி நாகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அசாருதீன், கலை அறிவியல் படிப்புகள் பற்றி பேராவூரணி அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் முனைவர் சண்முகப்பிரியா, பொறியியல் மற்றும் வேளாண்மை பற்றி கபார்கான், ஆசிரியர் மற்றும் சட்டப்படிப்புகள் பற்றி ஆசிரியர் கீதாஞ்சலி மஞ்சன், கல்விக்கடன் பற்றி பேராவூரணி ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் ராகவன் சூரியேந்திரன் ஆகியோர் உரை நிகழ்த்தினர். இந்நிகழ்வில் மாணவர்களும், பெற்றோர்களும் திரளாக கலந்துகொண்டனர். 

முன்னதாக ஒருங்கிணைப்பாளர் சற்குருநாதன் அனைவரையும் வரவேற்றார். இறுதியில் செல்வகுமார் நன்றி கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments