காரைக்குடியில் தொழில் வணிகக் கழகம் ஏற்பாட்டில் வருகிற ஜூன் 2-ம் தேதி கிழக்கு கடற்கரை இரயில் பயணிகள் ஒருங்கிணைப்பு கூட்டம்!



காரைக்குடியில் தொழில் வணிகக் கழகம் ஏற்பாட்டில் வருகிற ஜூன் 02ம் தேதி கிழக்கு கடற்கரை இரயில் பயணிகள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெறுகிறது.

இது குறித்து காரைக்குடி தொழில் வணிகக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கிழக்கு கடற்கரை இரயில் பயணிகள் ஒருங்கிணைப்புக் கூட்டம் மற்றும் ECRல் உள்ள இரயில் நிலையத்தின் குறைகள் கேட்புக்கூட்டம் நடைபெறுகிறது.

கிழக்குக் கடற்கரைப் பகுதி இரயில் நிலையங்களின் தேவைகளும், பயணிகளின் அவசியமான வசதிகளும் அறிந்து இந்திய அரசின் தெற்கு இரயில்வே துறையினரின் கவனத்திற்கு கொண்டு செல்லவும், இதற்கு நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து கலந்து உரையாடவும், சந்திக்கும் நிகழ்வினை நடத்திட முயற்சித்திருக்கின்றோம்.

எனவே, திருவாரூர் முதல் காரைக்குடி இரயில் வழிப் பாதையிலுள்ள நகரங்களின் வணிகர் சங்க நிர்வாகிகள் இரயில் பயணிகள் நலச் சங்க நிர்வாகிகளின் சந்திப்புக் கூட்டம், வருகின்ற 02.06.2023 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு காரைக்குடியில், எங்கள் சங்க அலுவலகத்தில் (A/c அரங்கில்) எண்: 45, மேல ஊரணி வாய்க்கால் தெரு. வ.உ.சி. சாலை எனும் முகவரியில் நடைபெற விருப்பதற்கு, தாங்களும், பிரதிநிதிகளுடன் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு: தங்கள் சங்கத்தின் (ரப்பர் ஸ்டாம்பு) முத்திரை அவசியம் கொண்டு வரவேண்டுகிறோம். கோரிக்கைகளை லெட்டர் பேடுபேப்பரில் எழுத்து வழியாக தர வேண்டுகின்றோம். வருகின்றவர்கள் எண்ணிக்கையை மே-30 க்குள் தெரிவிக்கவும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments