தொண்டியில் பேரூராட்சி சார்பில் மக்களின் அடிப்படை தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்ற வகையில் மாதத்தில் 2 நாட்கள் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் பொதுமக்கள் தங்களது பகுதி குறைபாடுகளை நிவர்த்தி செய்யக்கோரி மனுக்கள் அளித்தனர்




ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி முதல் நிலை பேரூராட்சியில் ஒவ்வொரு மாதமும் முதல் வாரம் செவ்வாய்க்கிழமையும், இறுதி வார செவ்வாய்க்கிழமையும் காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை மக்கள் குறை தீர்க்கும் நாளாக முன்பு அறிவிக்கப்பட்டது. அதன்படி நடந்த குறை தீர்க்கும் முகாமிற்கு பேரூராட்சி மன்ற தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் மகாலிங்கம் முன்னிலை வகித்தார். பொதுமக்கள் தங்களது பகுதி குறைபாடுகளை நிவர்த்தி செய்யக்கோரி பேரூராட்சி மன்ற தலைவரிடம் மனுக்களாக அளித்தனர்.

இந்த மனுக்களை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. இளநிலை உதவியாளர் ரவிச்சந்திரன் உடனிருந்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments