கோட்டைப்பட்டினத்தில் வருகிற (ஜூன்.12) தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தை கண்டித்து சாலை மறியல்!



கோட்டைப்பட்டினத்தில் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தை கண்டித்து சாலை மறியல் நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகா, கோட்டைப்பட்டினம் ஊராட்சி, கொடிக்குளம் வருவாய் கிராமம் புல எண் 219 - ல் சுமார் 1500 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு பட்டா வழங்கப்பட்டு தலைமுறை, தலைமுறையாக வீடு கட்டி குடியிருந்து வருகிறார்கள். தற்பொழுது இந்த புல எண் 219 முழுவதும் வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமானது என தவறான உத்தரவு பிறப்பிக்கப்பாட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவர்களின் சொந்த இடத்தை பத்திரபதிவு செய்து கொள்ள முடியவில்லை. எனவே புல எண் 219-க்கு பிறப்பிக்கப்பட்ட தவறான உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி பலமுறை மனு செய்தும் கண்டுகொள்ளாத வக்ஃப் வாரியத்தை கண்டித்து வருகிற 12/06/2023 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் கோட்டைபட்டினம் கடைவீதியில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. 

இப்படிக்கு, 
TMMK, SDPI, MJK, KPM பொதுநல கூட்டமைப்பு மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து பொதுமக்கள்.

தகவல்: முகமது ராவுத்தர், கோட்டைப்பட்டினம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments