முக்கண்ணாமலைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேசிய தர மதிப்பீட்டு சான்றிதழ்




புதுக்கோட்டை மாவட்டம், பரம்பூர் வட்டாரத்திற்குட்பட்ட முக்கண்ணாமலைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் மூலம் தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினர் கடந்த ஏப்ரல் மாதம் ஆய்வு மேற்கொண்டனர். இதில் மருத்துவமனையின் சுகாதாரம், மருந்து இருப்பு, நோயாளிகளுக்கான வசதிகள், மகப்பேறு சிகிச்சை, கடந்த ஓராண்டாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் விவரம், மருத்துவர், செவிலியர் எண்ணிக்கை, மக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறை குறித்து ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில் முக்கண்ணாமலைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 83.4 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேசிய தர மதிப்பீட்டு சான்றிதழ் பெற்றுள்ளது. மேலும் இந்த தரமதிப்பீட்டு சான்று பெற்ற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வீதம் 3 ஆண்டுகளுக்கு சிறப்பு நிதி தேசிய சுகாதாரத் திட்டத்தில் இருந்து வழங்கப்பட உள்ளது. தேசிய தர மதிப்பீட்டு சான்றிதழ் பெற்ற மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்களை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments