மதுரை-தேனி எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில் வருகிற 16-ந் தேதி முதல் போடி வரை நீட்டிக்கப்பட உள்ளது. அத்துடன், சென்னை சென்டிரல்-மதுரை வாரம் மும்முறை எக்ஸ்பிரஸ் ரெயில் போடி வரை நீட்டிப்பு செய்யப்பட உள்ளது.
மதுரை-போடி
மதுரையில் இருந்து போடி வரையிலான அகலப்பாதை பணிகள் நடந்து வந்தது. இதில், மதுரை-தேனி அகலப்பாதை பணிகள் முடிந்தவுடன் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், தேனி-போடி இடையேயான அகலப்பாதை பணிகள் முடிந்து போக்குவரத்துக்கு தயாராக உள்ளது. அதனை தொடர்ந்து, மதுரை-தேனி எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில் வருகிற 16-ந் தேதி முதல் போடி வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது. இதற்காக அந்த ரெயில் வந்து செல்லும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மதுரை-போடி எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில் (வ.எண்.06701) மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்படும். வடபழஞ்சியில் இருந்து 8.35 மணிக்கும், உசிலம்பட்டியில் இருந்து 9.05 மணிக்கும், ஆண்டிப்பட்டியில் இருந்து 9.25 மணிக்கும், தேனியில் இருந்து 9.44 மணிக்கும் புறப்பட்டு போடி ரெயில் நிலையத்துக்கு காலை 10.30 மணிக்கு சென்றடையும்.
மறுமார்க்கத்தில் போடி-மதுரை எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில் (வ.எண்.06702) போடியில் இருந்து மாலை 5.50 மணிக்கு புறப்படும். ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி, வடபழஞ்சி ஆகிய ரெயில் நிலையங்களில் இருந்து வழக்கமான நேரத்துக்கு புறப்பட்டு இரவு 7.50 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடையும்.
சென்னை சென்டிரல்-போடி
இந்த நிலையில், மதுரை-போடி ரெயில் சென்னை வரை நீட்டிப்பு செய்து கடந்த சில மாதங்களுக்கு முன் உத்தரவிடப்பட்டது. அதாவது, மதுரை-சென்னை சென்டிரல் வாரம் மும்முறை எக்ஸ்பிரஸ் ரெயில் போடி வரை நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த ரெயில்சேவை தொடங்குவது திடீரென்று ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே, வருகிற 16-ந் தேதி முதல் சென்னை சென்டிரல்-போடி ரெயில் சேவை தொடங்க உள்ளது.
அதன்படி, இந்த ரெயில் (வ.எண்.20601) சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இரவு 10.30 மணிக்கு வழக்கம் போல புறப்பட்டு மறுநாள் காலை 7.10 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மதுரையில் இருந்து செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் காலை 7.15 மணிக்கு புறப்பட்டு 8 மணிக்கு உசிலம்பட்டிக்கும், 8.20 மணிக்கு ஆண்டிப்பட்டிக்கும் சென்றடைகிறது. தேனி ரெயில் நிலையத்தில் இருந்து 8.40 மணிக்கு புறப்பட்டு காலை 9.35 மணிக்கு போடி ரெயில் நிலையம் சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில், வருகிற 18-ந் தேதி முதல் போடியில் இருந்து மதுரை வழியாக சென்னை சென்டிரலுக்கு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் (வ.எண்.20602) போடியில் இருந்து செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு தேனிக்கு 8.50 மணிக்கு வந்தடைகிறது. ஆண்டிப்பட்டியில் இருந்து இரவு 9.10 மணிக்கும், உசிலம்பட்டியில் இருந்து இரவு 9.30 மணிக்கும் புறப்படுகிறது.
மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.55 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் சென்றடைகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.