காரைக்குடி தொழில் வணிக கழகம் சார்பில் கிழக்கு கடற்கரை ரெயில் பயணிகள் ஆலோசனை கூட்டம் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
காரைக்குடி தொழில் வணிக கழகம் சார்பில் கிழக்கு கடற்கரை ரெயில் பயணிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தொழில் வணிக கழக தலைவர் சாமி திராவிடமணி தலைமை தாங்கினார்.
கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். சங்கத்தின் செயலாளர் கண்ணப்பன் தொடக்கவுரையாற்றினார். கூட்டத்தில் மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, தில்லைவிளாகம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, தேவகோட்டை, திருப்பத்தூர், புதுவயல், கல்லல் மற்றும் காரைக்குடி உள்ளிட்ட நகரத்தின் வர்த்தகர் சங்கத்தினர், ரெயில் பயணிகளின் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
காரைக்குடி-திருவாரூர் ரெயில் வழித்தடத்தில் மின்சார வழி பாதையாக மாற்றி தினசரி இருமார்க்கத்திலும் பயணிகள் ரெயில்கள் இயக்க வேண்டும். 

காரைக்குடியில் இருந்து திருவாரூர் வழியாக சென்னைக்கு எழும்பூர் வரையிலும், இரவு நேர விரைவு ரெயில் சேவையும், ராமேசுவரத்தில் இருந்து காரைக்குடி, திருவாரூர் வழியில் மயிலாடுதுறைக்கு முன்பதிவில்லாத விரைவு ரெயில் இயக்கப்படுவதுடன் 
காரைக்குடி-திருவாரூர் வழியில் தற்போது செல்லும் செகந்திராபாத், எர்ணாகுளம்-வேளாங்கண்ணி விரைவு ரெயில்களை அனைத்து நிலையங்களிலும் நின்று செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் பொருளாளர் சரவணன் நன்றி கூறினார்.


PC Credit: Pattukottai Vivegantham 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments