பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில், நவீன முறையில் அறுவை சிகிச்சை செய்து, இளைஞருக்கு ப்ளேட் பொறுத்தப்பட்டது.




பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில், நவீன முறையில் அறுவை சிகிச்சை செய்து, இளைஞருக்கு ப்ளேட் பொறுத்தப்பட்டது. நவீன முறையில், வெற்றிகரமாக சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களுக்கு சுகாதாரத்துறை இணை இயக்குனர் மருத்துவர் திலகம் பாராட்டு தெரிவித்துள்ளார்.  

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள அத்திவெட்டியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (25) கல்லூரி மாணவர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பைக்கில் சென்ற போது தவறி விழுந்து அடிபட்டார். இதையடுத்து அவர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார்.  

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இதில், அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு, அதற்காக பிளேட் பொருத்தும் சூழ்நிலை உள்ளதை கண்டறிந்தனர். இதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்த அவருக்கு, நேற்று வெள்ளிக்கிழமை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அன்பழகன் மேற்பார்வையில், எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் நியூட்டன் தலைமையில், மயக்க மருத்துவர்கள் தம்பு சுதாகர், சுபஸ்ரீ மற்றும் செவிலியர்கள், தொழில்நுட்பநர்கள் அடங்கிய குழுவினர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்தனர். காலை 8 மணிக்கு தொடங்கிய அறுவை சிகிச்சை 9: 30 மணிக்கு வெற்றிகரமாக நிறைவடைந்தது.  

இதுகுறித்து, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கூறுகையில், "முழு உடலையும் மரக்கச் செய்யாமல், கைபாகத்திற்கு மட்டும் மயக்க மருந்து செலுத்தப்பட்டு, ரீஜினல் அனஸ்தீசியா என்ற நவீன முறையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நவீன பிளேட் பொருத்தப்பட்டுள்ளது.  

இந்த அறுவை சிகிச்சை நடந்த போது, அவர் தனக்கு அறுவை சிகிச்சை நடந்ததை காணவும், பேசவும் முடியும். தொடர்ந்து அவர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். ஓரிரு நாளில் வீட்டுக்கு அனுப்பப்படுவார்" எனத் தெரிவித்தனர்.  

அறுவை சிகிச்சை முடிந்து தற்போது நோயாளி நலமுடன் உள்ளார். அவரது உறவினர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தனியார் மருத்துவமனைக்கு நிகராக, சவாலான அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவக் குழுவினருக்கு தஞ்சாவூர் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் திலகம் பாராட்டு தெரிவித்துள்ளார்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments