அதிராம்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில் முதன் முறையாக குடலிறக்க அறுவை சிகிச்சை




அதிராம்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில் முதன் முறையாக குடலிறக்க அறுவை சிகிச்சை நடந்தது.

குடலிறக்கம்

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை ஊராட்சிக்குட்பட்ட பிலால் நகர் தெருவை சேர்ந்தவர் அப்துல் ரஹீம் (வயது45). இவர் கடந்த 3 மாதங்களாக குடலிறக்க பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார்.

இதனையடுத்து அதிராம்பட்டினம் அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் நியூட்டன் ஆலோசனையின்படி உடல் பரிசோதனை செய்து வந்துள்ளார். இருந்தபோதும் குடலிறக்கம் அறுவை சிகிச்சை செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.


அறுவை சிகிச்சை

இதனையடுத்து அப்துல் ரஹீமிடம் குடல் இறக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர் கூறியுள்ளார். பின்னர் தலைமை டாக்டர் நியூட்டன் தலைமையில் அறுவை சிகிச்சை நிபுணர் பிரசன்னா, மயக்க மருந்து நிபுணர்.டாக்டர்.ஹக்கீம், மருத்துவ சேவைகள் இணை இயக்குனர் டாக்டர் திலகம் ஆகியோர் இணைந்து குடல் இறக்க அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்தனர்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு தற்போது அப்துல் ரஹீம் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்திருந்தால் குறைந்தது ரூ.40 ஆயிரம் செலவாகும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தினால் இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும் அதிராம்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில் முதல்முறையாக குடலிறக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என டாக்டர்கள் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments