பெருமருதூர் கிராமத்தில் மாட்டு வண்டி எல்கை பந்தயம்




பெருமருதூர் கிராமத்தில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

மாட்டு வண்டி பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே பெருமருதூர் கிராமத்தில் பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. இக்கோவிலின் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் பெருமருதூர்-ஆவுடையார்கோவில் சாலையில் நடைபெற்றது. மாட்டு வண்டி எல்கை பந்தயம் 3-ந் தேதி 2 பிரிவுகளாக நடைபெற்றது.

நேற்று காலை பெரிய மாடு, கரிச்சான் மாடு, தேன்சிட்டு மாடு என 3 பிரிவுகளாக மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

பரிசு

பந்தயத்தில் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 104 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பந்தயத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற முதல் 3 மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு ரொக்கம், கொடி பரிசுகள் வழங்கப்பட்டன.

பந்தயத்திற்கான ஏற்பாடுகளை பெருமருதூர் கிராமத்தார்கள் செய்திருந்தனர். பந்தயத்தை காண திரளானவர்கள் வந்திருந்து கண்டு களித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments