புதுவை - கடலூர் ரெயில்பாதை திட்டம் தொடர்பாக ரெயில்வே அதிகாரிகளுடன் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆலோசனை நடத்தினார்.
ரெயில்வே அதிகாரிகள்
தென்னக ரெயில்வேயின் தலைமை நிர்வாக அதிகாரி (கட்டுமானம்) வி.கே.குப்தா தலைமையிலான அதிகாரிகள் குழு புதுச்சேரி வந்தது. இந்த குழுவினர் கவர்னர் தமிழிசை சவுந்தர ராஜனை கவர்னர் மாளிகையில் சந்தித்து பேசினார்கள்.
அப்போது புதுவை ரெயில் நிலையம் மற்றும் புதுச்சேரிக்கான ரெயில் சேவைகளை மேம்படுத்துவது, ரெயில் நிலையத்தில் புவிசார் குறியீடு பெற்ற சுடுகளிமண் சிற்ப அரங்கு அமைப்பது, புதுச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் இருக்கும் வழிபாட்டு தலங்களுக்கு ரெயில் சேவையை தொடங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது
மாமல்லபுரம்- கடலூர்
மேலும் வில்லியனூர் ரெயில் நிலையத்தை முக்கிய நிறுத்தமாக மேம்படுத்துவது, சென்னை- மாமல்லபுரம், கடலூர் (புதுச்சேரி வழியாக) வழித்தடத்திலான ரெயில் சேவை திட்டத்தை விரைவுபடுத்துவது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. ரெயில் சேவை மேம்பாட்டு பணிகளை குறித்த காலத்திற்குள் விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளை கவர்னர் கேட்டுக்கொண்டார்.
இந்த சந்திப்பின்போது தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா, அரசு செயலாளர்கள் முத்தம்மா, மணிகண்டன், கலெக்டர் வல்லவன், போக்குவரத்து ஆணையர் சிவக் குமார் ஆகியோர் உடனிருந் தனர்.
அதைத்தொடர்ந்து ரெயில்வே அதிகாரிகள் கடலூர் சாலையில் ரெயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் கட்டுவது தொடர்பாக நேரில் வந்து பார்வையிட்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.