ரேஷன் கடை தொடர்பான குறைதீர்க்கும் நாள் கூட்டம் தாசில்தார் அலுவலகங்களில் நாளை ஜூன் 10-ம் தேதி நடக்கிறது
பொது வினியோகத்திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வட்டத்திலும் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொதுவினியோக திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற உள்ளது. குடும்ப அட்டைகள், ரேஷன் கடை தொடர்பாக அந்தந்த தாசில்தார் அலுவலகங்களில் தொடர்புடைய தனி தாசில்தார், வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னிலையில் முகாம் நடைபெற உள்ளது. மேற்படி முகாமில் பொதுமக்கள், குறிப்பாக குடும்ப அட்டைதாரர்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல், செல்போன் எண் பதிவு, மாற்றம் ஆகிய சேவைகளை வேண்டி முகாமில் கோரிக்கை மனுவை அளிக்கலாம். பொதுமக்கள் மற்றும் அட்டைதாரர்கள் சார்பாக ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் குடும்ப அட்டைகளில் தங்களுக்குள்ள இடர்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை தெரிவித்து பயன்பெறலாம் என கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments