டாடா மோட்டார்ஸ் பெயரில் பரவும் பொய் செய்தி யாரும் நம்பாதீர்கள் tata motors 15th anniversary fake news




கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் டாடா மோட்டார்ஸ் 15 ஆவது ஆண்டு விழா கொண்ட்டாட்டம்  என என்று ஒரு பதிவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள்.

அந்த செய்தி உண்மையா?  அந்த செய்தி பொய்யானது. 

யாரும் நம்பவேண்டாம். 

அப்படியானால் உண்மை என்ன? 

இது போன்ற செய்திகளை நம்புகின்றவர்கள் முதலில் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் என GPM மீடியா விரும்புகின்றது. 

முதலில் இந்த செய்தியின் உண்மை என்னவென்றால்...இந்த மாதிரி செய்திகளை எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள். இதுவரைக்கும் எந்த  நிறுவனமும் ஆதாரபூர்வமாக யாருக்குமே இதுபோன்ற இலவசமாக லிங்கின் மூலம் கொடுத்ததில்லை. 

இரண்டாவது இது மாதிரி fake மெசேஜ் அனுப்பி உங்கள் போனில் உள்ள அவர்களுக்கு வேண்டிய தகவல்கள் திருடப்படலாம்... அந்த வெப்சைட்டில் நீங்கள் நன்றாக பார்த்தீர்கள் என்றாலே தெரியும் இது ஒரிஜினல் கிடையாது

இந்த லின்ங்கில் நீங்கள் போனால் என்ன நடக்கும்உடனடியாக இந்த தகவலை நீங்க 21 வாட்ஸ் குரூப்புக்கு ஷேர் பண்ணுங்க என வரும் நீங்களும் நம்பி பல வாட்ஸப் குருப்புக்கு ஷேர் செய்வீங்க  திரும்ப போனாலும் மீண்டும் அதே போல் காண்பிக்கும்

நீங்கள் ஷேர் செய்து விட்டு போயிடுவீங்க நீங்கள் ஷேர் பண்ண அந்த வதந்தியை அவர்கள் அடுத்தவர்களுக்கு ஷேர் செய்வார்கள் இப்படியேதான் வதந்திகள் பரவிக் கொண்டே வருகிறது. 

இது போன்ற பொய்யான செய்திகளால்  உங்கள் தகவல் திருடப்படலாம் என்பது  ஆதாரபூர்வமான உண்மை மேலும் இது மெசேஜில் உள்ள லிங்க்கை கிளிக் செய்தால் மோசடி செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக இந்திய அரசின் இணைய பாதுகாப்பு குழு ஆலோசனை வழங்கியுள்ளது. 

அதுபோல் வரும் இணைப்பை கிளிக் செய்தால் அதில் உங்களது தனிப்பட்ட விவரங்கள் மற்றும் வங்கி விவரங்கள் கேட்கப்பட்டால் அதை யாரும் தர வேண்டாம் என்றும் இந்திய அரசின் இணைய பாதுகாப்பு குழு அறிவுறுத்தியுள்ளது. 

மெசேஜை கிளிக் செய்து உங்கள் தனிப்பட்ட தகவலை தந்தால் உங்களுடைய வங்கி கணக்கில் உள்ள பணம் முழுவதும் காலியாக வாய்ப்பு இருப்பதாகவும் எனவே இந்த மோசடியில் யாரும் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இது போன்ற போலியான மெசேஜ்களை அனுப்பப்பட்டு வருவதாகவும் இது குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அதுபோல் மெசஜ் வந்தால் அதை உடனடியாக டெலிட் செய்ய வேண்டும்

உங்களுக்கு ஆசையை காட்டி உங்கள் வங்கி கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் திருடி விடுவார்கள் இது போன்ற மோசடிகளில் இருந்து பாதுகாக்க நமக்கு தெரியாத நபர்களிடம் இருந்து வரும் இணைப்பை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் குறிப்பாக யாராக இருந்தாலும் வங்கி கணக்கு விவரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் லிங்குகளை கவனமாக படித்து அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்த பின்னரே கிளிக் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும் நீங்கள் சிந்திக்க இதுபோல் பல லின்ங்குகள் இதுவரை சமூக வலைதளங்களில் பரவி உள்ளது ஏன் நீங்களே இது போல் பல லின்ங்கினை ஷேர் செய்து உள்ளீர்களே மறந்து விட்டீர்களா 

சில மாதங்களுக்கு முன்பு உலகக் கோப்பை கால்பந்து போட்டியைப் பார்க்க 50 ஜிபி டேட்டா இலவசம் என  பரவிய பொய்யான செய்தியை மறந்து விட்டீர்களா

ஹோண்டா பைக் இலவசம் 

ரீசார்ஜ் இலவசம் 

லேப்டாப் இலவசம் 

லாக்டவுன் ரூ 5000 இலவசம் 

10 ஜிபி இலவசம் 

என நீங்கள் ஷேர் செய்த பொய்யான வதந்தி செய்தி போல் தான் இதுவும் 

எனவே பொய்யான செய்தியை ஷேர் செய்யாதீர்கள் என GPM மீடியா சார்பாக வேண்டி கேட்டு கொள்கின்றோம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments