SDPI கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம்!



SDPI கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

SDPI புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று 20/06/2023 மாலை மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் U.செய்யது அஹமது தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் SAM.அரபாத் வரவேற்புரை நிகழ்த்த, சிறப்பு அமைப்பாளராக மாநில செயற்குழு உறுப்பினர் தப்ரே ஆலாம் பாஷா, வழக்கறிஞர் சபியா கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்தில் ஜீன் 21-ஆம் தேதி கட்சியின் துவக்க தினத்தன்று கொடியேற்று நிகழ்ச்சி, நலதிட்ட உதவி வழங்குவது, மாவட்டம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இறுதியாக மாவட்ட செயலாளர் F.முகம்மது சாலிகு நன்றியுரை நிகழ்த்தினார்.

தகவல்: செய்யது இபுராஹீம், கோட்டைபட்டினம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments