600 புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் புதுகைக்கு வருகை
அடுத்தாண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலுக்காக பெங்களூரு பெல் நிறுவனத்தில் புதிதாக தயாரிக்கப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் 600 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் புதுக்கோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மாவட்ட ஆட்சியரக வளாகத்திலுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு வைப்பறையில் அவை சனிக்கிழமை பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியரும் மாவட்டத் தோ்தல் அலுவலருமான ஐ.சா. மொ்சி ரம்யா இவற்றைப் சரிபாா்த்தாா். மேலும், இதே வைப்பறையில் ஏற்கெனவே வைக்கப்பட்டுள்ள மின்னணு இயந்திரங்களின் காலாண்டு ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வின்போது அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) து. தங்கவேல், தனி வட்டாட்சியா் (தோ்தல்) சோனை கருப்பையா ஆகியோா் உடனிருந்தனா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments