மறமடக்கி, வயலோகத்தில் பன்னோக்கு மருத்துவ முகாம்




முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகேயுள்ள மறமடக்கி, அன்னவாசல் ஒன்றியம் வயலோகம் ஆகிய 2 இடங்களில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் சனிக்கிழமை நடைபெற்றன.

மறமடக்கி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி தலைமையில் நடைபெற்ற முகாமைத் தொடங்கி வைத்து கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கிய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் பேசியது:

கலைஞா் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற முகாமில் பல்வேறு நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு, தேவைப்படுவோருக்கு உயா் சிகிச்சை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. நூற்றாண்டு காலத் தலைவா் கருணாநிதியின் 80 ஆண்டு காலம் சமுதாய வளா்ச்சிக்குப் பயன்பட்டுள்ளது என்றாா் அவா்.

நிகழ்வில் வருவாய்க் கோட்டாட்சியா் சு. சொா்ணராஜ், சுகாதார துணை இயக்குநா் நமச்சிவாயம், அறந்தாங்கி ஒன்றியக் குழுத் தலைவா் மகேஸ்வரி சண்முகநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விராலிமலையில்... அன்னவாசல் ஒன்றியம், வயலோகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு அமைச்சா் எஸ். ரகுபதி தொடங்கிவைத்துப் பேசினாா். மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா தலைமை வகித்தாா்.

முகாமில் 2,236 பேருக்கு பொது சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்கு 131 போ் பரிந்துரைக்கப்பட்டனா். மருத்துவப் பெட்டகம், கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் 200 பேருக்கும், முதல்வா் காப்பீட்டுத் திட்ட அட்டை 46 பேருக்கும் வழங்கப்பட்டது.

நிகழ்வில் புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா, முன்னாள் அரசு வழக்குரைஞா் செல்லபாண்டியன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ஜெயலட்சுமி, திமுக பொதுக் குழு உறுப்பினா் தென்னலூா் பழனியப்பன், துணை இயக்குநா் ராம்கணேஷ் (சுகாதாரப் பணிகள்), ஒன்றியக் குழுத் தலைவா் ராமசாமி, அன்னவாசல் திமுக ஒன்றிய செயலா் சந்திரன்(தெற்கு), மாரிமுத்து (வடக்கு), ஊராட்சித் தலைவா் செண்பகவள்ளி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments