கோபாலப்பட்டிணம் மையவாடியில் ரூ.3 லட்சத்தில் தரமற்று போடப்பட்ட பேவர்பிளாக் சாலை! ஆய்வு மேற்கொண்ட அதிகாரி!!கோபாலப்பட்டிணம் மையவாடியில் ரூ.3 லட்சத்தில் தரமற்று போடப்பட்ட பேவர்பிளாக் சாலை குறித்து அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.

புதுகோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணம் மையவாடியில் சுமார் ரூ.3 லட்ச மதிப்பீட்டில் 15-வது நிதிக்குழு மானியத்தில் (2021-2022) இருந்து புதிதாக பேவர்பிளாக் சாலை கடந்த மே மாதம் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்த சாலையானது சரியான முறையில் அமைக்கப்படாமல் தரமற்று அமைக்கப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டது. அதனையடுத்து கடந்த 4/05/2023 அன்று பொறியாளர் ஆய்வு மேற்கொண்டார். 

ஆய்வு மேற்கொண்டதில் தரமற்று சாலை அமைக்கப்பட்டுள்ளது உறுதியானதையடுத்து சரி செய்து தரப்படும் என பொறியாளர் தெரிவித்தார். 

ஆய்வின் போது ஊராட்சி மன்ற செயலாளர் பிரபு, ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் பஷீர் மற்றும் சமூக ஆர்வலர் முகமது ரியாஸ் உடனிருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments