கோபாலப்பட்டிணம் கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமை!



கோபாலப்பட்டிணம் கடற்கரையில் இறந்த நிலையில் கடல் ஆமை கரை ஒதுங்கியது.

புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணம் கடற்கரையில் கடந்த சில நாட்களுக்கு முன் பெரிய ஆமை ஒன்று இறந்து கரை ஒதுங்கியது.  இந்த நிலையில் அந்த ஆமை உடலை பரிசோதனைக்கு எடுத்து செல்லப்படாமல் அங்கேயே கிடக்கிறது. வழக்கமாக இது போன்ற கடல் உயிரினங்கள் கரை ஒதுங்கும்போது அதை எடுத்து செல்லப்பட்டு அவை அரிய வகை சேர்ந்தவையா? ஆணா? பெண்ணா? இறந்ததற்கான காரணம் ஆகியவை குறித்து பரிசோதனை நடத்தப்படும்.
மேலும் கடலின் மாசு பாடு காரணமாக இறந்ததா? பிளாஸ்டிக்கின் பயன்பாடு அதிகமானதால் இறந்ததா? என ஆய்வு மேற்கொள்ளப் பட வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் ஆமையின் உடல் எடுத்து செல்லப் படாமல் கடற்கரையிலேயே துர்நாற்றத்துடன் கிடக்கிறது. இதுகுறித்து அதிகாரிகள் கவனம் செலுத்தாமல் உள்ளனர். 

இந்த நிலையில் ஆமையின் உடலை அப்புறப்படுத்தி உரிய பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொண்டி கடற்கரையில் கடந்த  நான்கு  நாட்களுக்கு முன் இதே போன்று இறந்த நிலையில் கடல் ஆமை கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments