மீமிசலில் CPML கட்சி சார்பில் நாளை (ஜூன்.26) கோபாலப்பட்டிணத்தில் நீண்ட நாட்களாக தேங்கி இருக்கும் குப்பைகளை அகற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டம்!CPML கட்சி சார்பில் நாளை 26/06/2023 கோபாலப்பட்டிணத்தில் நீண்ட நாட்களாக தேங்கி இருக்கும் குப்பைகளை அகற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கோபாலப்பட்டிணத்தில் நீண்ட நாட்களாக தேங்கி இருக்கும் குப்பைகளை அகற்ற கோரி நாளை 26/06/2023 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் மீமிசல் கடைவீதியில் CPML ஒருங்கிணைப்பாளர் S.சர்புதீன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
 
இதில் பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்த உள்ளனர்.

கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

  • அவுலியா நகர் சாலைகளை செப்பனிடு.
  • அவுலியா நகரில் கழிவு நீர் செல்ல முறையான கால்வாய் வசதி செய்து கொடு.
  • கோபாலப்பட்டிணம், அவுலியா நகர் பகுதிகளில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்து. 
  • கோபாலப்பட்டிணத்தில் அனைத்து சாலைகளையும் உடன் செப்பனிடு.
  • தேங்கிக் கிடக்கும் குப்பையை கொட்ட தனி இடம் அமைத்து கொடு பஞ்சாயத்தில் இடம் கொடுத்தும் தடுக்கும் நபர் மீது நடவடிக்கை எடு.
  • கோபாலப்பட்டிணம் காட்டுகளம் ரோடு மற்றும் ஊர் முழுவதும் சாலை அமைத்து கொடு.
  • மீமிசல் ஊராட்சி பகுதி மக்களுக்கு குப்பைகளை கொட்டுவதற்கு நிரந்தரமாக இடம் அமைத்து தரவேண்டும். 
  • கோபாலப்பட்டிணம் தனி ஊராட்சியாக மாற்ற நடவடிக்கை எடு.

அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இப்படிக்கு..
CPML மக்கள் ஒருங்கிணைப்பாளர் கூட்டமைப்பு
செல்: 96000970318, 91503 52525, 97153 67922,

தகவல்: முகமது ரியாஸ், கோபாலப்பட்டிணம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments