மூக்குடி ஊராட்சியில் ரூ.28 லட்சத்தில் புதிய பள்ளி கட்டிடத்திற்கு எம்எல்ஏ ராமசந்திரன் அடிக்கல் நாட்டினார்மூக்குடி ஊராட்சியில் ரூ.28 லட்சத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி புதிய கட்டிடத்திற்கு எம்எல்ஏ ராமசந்திரன் அடிக்கல் நாட்டினார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த மூக்குடி ஊராட்சியில் 28 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடத்திற்கு அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமசந்திரன் அடிக்கல் நாட்டினார்.

மூக்குடி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கட்டிடம் மிகவும் பழுதடைந்து உள்ளதால் மாணவர்கள் மரத்தின் நிழலில் இருந்து படிக்கும் நிலை ஏற்பட்டது. அதனால் அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமசந்திரன் தொகுதி நிதியிலிருந்து ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.

நகர தலைவர் கிருபாகரன், கூடலூர்முத்து, தேவதாஸ் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், ஓய்வு ஆசிரியர் நடராசன், தலைமையாசிரியை சரஸ்வதி, ஆசிரியர்கள் ஜோதிமணி, ஆர்.பாரதி, ரெத்தின முத்து வள்ளி, தமிழரசி, சத்தியா, சித்ரா, பால்ராஜ், வட்டார கல்வி அலுவலர் நிஸார், ஊர் அம்பலம் அம்பாள் சுப்ரமணியன், ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், ஒன்றிய கவுன்சிலர், ஊர் முக்கிய பிரமுகர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments