காரைக்கால் - பேரளம் ரயில் பாதையை நாச்சியாா்கோவில் வழியாக கும்பகோணம் வரை நீட்டிக்க வலியுறுத்தல்




காரைக்கால் முதல் பேரளம் வரை அமைக்கப்படும் அகல ரயில் பாதையை கும்பகோணம் வரை நீட்டிக்க ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவுக்கு காவிரி டெல்டா ரயில் மற்றும் நெடுஞ்சாலை திட்ட ஒருங்ணைப்புக் குழுத் தலைவா் ஆா்.மோகன் திங்கள்கிழமை அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பது :

காரைக்கால் முதல் பேரளம் வரை அகலப்பாதை அமைக்கும் பணியில், இரட்டைப் பாதையாக மேம்படுத்தும் வகையில் பாலங்களும், மேம்பாலங்களும் அமைக்கப்பட்டுவருகின்றன. தற்போது அமைக்கப்படும் அகல ரயில்பாதையை, நாச்சியாா்கோவில் வழியாக கும்பகோணம் வரை நீட்டிக்கவேண்டும்.

ரயில் மற்றும் நெடுஞ்சாலை இணைப்பு குறைபாடு காரணமாக காரைக்கால் துறைமுகத்தில் தற்போது 5 முதல் 6 மில்லியன் டன் சரக்குகளே கையாளப்படுகிறது. துறைமுகத்தின் இரு திசைகளிலும் இரட்டை ரயில்பாதை அமைப்பதன் மூலம் துறைமுகத்தின் ஏற்றுமதி அளவு 20 மில்லியன் டன்னாக உயரும்.

எனவே ரயில் பாதை நீட்டிப்பு குறித்து உரிய ஆய்வுப் பணியை உடனடியாக தொடங்குவதோடு, வரும் 2024-25-ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் இத்திட்டத்தை சோ்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments