வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் நீரிலும், நிலுத்திலும் செல்லும் ரோவர் கிராப்ட் கப்பல் மூலம் கடற்படையினர் ரோந்து பணி




கோடியக்கரையில் நீரிலும், நிலுத்திலும் செல்லும் ரோவர் கிராப்ட் கப்பல் மூலம் கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி

நாகை மாவட்டம் வேதாரண்யம், ஆறுகாட்டுதுறை, கோடியக்கரை, மணியன்தீவு, புஷ்பவனம் ஆகிய பகுதிகளில் உள்ள கடற்கரையில் கடந்த 2நாட்களாக சாகர் காவச் என்னும் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

இதில் 40-க்கும் மேற்பட்ட கடலோர காவல் படையினர், ஊர்காவல் படையினர் கடலில் படகுகளில் சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளில் சோதனை செய்தனர்.


இந்த நிலையில் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ரோவர் கிராப்ட் கப்பல் நேற்று கோடியக்கரைக்கு வந்தது. நீரிலும், நிலத்திலும் செல்லும் இந்த ரோவர் கிராப்ட் கப்பலில் கடற்படையினர் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

கோடியக்கரைக்கு அருகில் இலங்கை இருப்பதால் கடல் மார்க்கமாக அகதிகள் தமிழகத்திற்கு பலர் வரக்கூடும் என்பதாலும், தீவிரவாதிகள் ஊடுருவலை தடுப்பதற்காகவும் ரோவர் கிராப்ட் கப்பல் மூலம் கடற்படையினர் கோடியக்கரையில் இருந்து தனுஷ் கோடி வரை தீவிரமாக கண்காணிப்பு பணயியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீவிர கண்காணிப்பு பணி

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு தங்கம், கஞ்சா உள்ளிட்டவை கடத்தப்படுகிறதா? என்றும் தீவிர கண்காணிப்பில் கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கோடியக்கரை பகுதியில் இந்த கண்காணிப்பு இன்னும் ஒரு சில நாட்கள் நடைபெறும் என கடலோர பாதுகாப்பு குழும அதிகாரிகள் தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments