கடைகளில் பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்க உரிமம் பெற வேண்டுகோள் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் தகவல்




புதுக்கோட்டை மாவட்டத்தில் பெட்டிக்கடைகள், மளிகைக் கடைகள், பேரங்காடிகள் போன்றவற்றில் எலி விஷம், கரப்பான் கொல்லிகள், கொசுவிரட்டிகள் போன்ற வீட்டில் பயன்படுத்தும் பூச்சிகொல்லி மருந்துகள் ஆகியவற்றை விற்பனை உரிமம் பெறாமல் விற்பனை செய்யப்படுவது பூச்சிக்கொல்லிச் சட்டப்படி குற்றமாகும். வீடுகளில் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகளை கடைகளில் விற்கவும் உரிமம் பெறுவது அவசியமாகும். இதற்கான உரிமத்தினை பெற தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். நகர்ப்புறத்தில் ஒரு பூச்சிக்கொல்லி மருந்துக்கு ரூ.500 என்ற வீதத்தில் அதிகபட்சம் ரூ.7,500 செலுத்தியும், ஊரக பகுதியில் ஒரு பூச்சிக்கொல்லி மருந்துக்கு ரூ.100 என்ற வீதத்தில் அதிகபட்சம் ரூ.1,500 செலுத்தியும் உரிமம் பெற்றுக்கொள்ளலாம். பற்பசை வடிவில் விற்பனை செய்யப்படும் ரேட்டால் எனப்படும் 3 சத மஞ்சள் பாஸ்பரஸ் கொண்ட எலிக்கொல்லி விஷம் தமிழக அரசால் அறிவிப்பு செய்யப்பட்டு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை விற்பனையாளர்கள் விற்பனை செய்யக்கூடாது, ஆய்வின் போது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

 மேலும், விற்பனை நிலையங்களில் வீட்டில் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகளை உணவு பொருட்கள் அருகில் வைத்து விற்பனை செய்யாமல் தனியாக இருப்பு வைத்து விற்பனை செய்ய வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மேற்கண்ட வீட்டுப் பயன்பாட்டுப் பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்யக் கூடாது. மேற்கண்ட தகவலை கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments