திருட்டுப்போன ரூ.27 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு




புதுக்கோட்டை போலீஸ் நிலையங்களில் பதிவான தொலைந்து போன செல்போன் வழக்குகளில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவிட்டிருந்தார். அதன்அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேன்தமிழ்வளவன் தலைமையில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், கடந்த ஒரு மாதத்தில் சுமார் ரூ.27 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள திருட்டு போன 118 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

 மேலும் அந்த செல்போன்களை புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உரிய நபர்களிடம் ஒப்படைத்தார். கடந்த மே மாதம் பிடிபட்ட 75 செல்போன்கள் உள்பட சுமார் ஒன்றரை ஆண்டுகளில் ரூ.82 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள 393 செல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் செல்போன்கள் கண்டுபிடிப்பில் சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே வெகுமதிகள் வழங்கி பாராட்டினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments