தேவகோட்டை அருகே கார் மோதி முதியவர் மரணம் 2 பேர் காயம்
தேவகோட்டை அருகே கார் மோதியதில் முதியவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் 2 பேர் லேசான காயம் அடைந்தனர்.

கார் மோதி முதியவர் சாவு

தேவகோட்டை அருகே உள்ள வலங்காவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கரன் (வயது 75). இவர் நேற்று வலங்காவயல் கிராமத்தில் இருந்து சடையன்காடு விலக்கு அருகேயுள்ள டீ கடைக்கு டீ குடிக்க சென்றார். பின்னர் டீ குடித்து விட்டு ஊருக்கு செல்ல இருசக்கர வாகனத்தில் சாலையின் குறுக்கே சென்றார்.

அப்போது ராமநாதபுரத்தில் இருந்து காரைக்குடி நோக்கி திருச்சி-ராமேசுவரம் சாலையில் வந்த கார், சங்கரனின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

2 பேர் காயம்

கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் பள்ளத்தில் கவிழ்ந்தது. காரை ஓட்டி வந்த கீழக்கரையைச் சேர்ந்த அசாருதீன் மற்றும் காரில் இருந்த கான் ஆகியோர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இது குறித்து ஆறாவயல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டீ குடிக்க சென்ற இடத்தில் விபத்தில் முதியவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments