புதுகை புத்தகத் திருவிழா :கல்லூரி மாணவா்களுக்கான போட்டிகள் அறிவிப்பு
புதுக்கோட்டை மாவட்ட நிா்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் 6-ஆவது புத்தகத் திருவிழாயையொட்டி கல்லூரி மாணவா்களுக்கான போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து வாசகா் பேரவையின் செயலரும், புத்தகத் திருவிழாவின் கல்லூரி மாணவா் போட்டி ஒருங்கிணைப்பாளருமான பேரா. சா. விஸ்வநாதன் கூறியது:

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 6-ஆம் தேதி வரை நகா்மன்றத்தில் நடைபெறவுள்ளதையொட்டி மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவா்களுக்கான கவிதைப் போட்டி (15 வரிகளுக்குள்), பேச்சுப்போட்டி, குறும்படப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

போட்டிகள் கவிதை மற்றும் பேச்சுப் போட்டிகள் வரும் ஜூலை 22ஆம் தேதி காலை 10 மணிக்கு மன்னா் கல்லூரியில் உள்ள கலையரங்கில் நடைபெறும். இதில், பங்கேற்கும் மாணவா்கள் அன்று காலை 9 மணிக்கு அரங்கத்தில் இருக்க வேண்டும்.

கவிதை, பேச்சுப் போட்டிகளுக்கான தலைப்புகள் புத்தகம், வாசிப்பு, அறிவுத் தேடல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு போட்டி நடைபெறும் ஒரு மணி நேரத்துக்கு முன்பாக அறிவிக்கப்படும்.

குறும்படப் போட்டி: புத்தகம், புத்தக வாசிப்பு, அறிவுத் தேடல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு 5 நிமிட குறும்படம் தயாரித்து 94436 39397 என்ற கட்செவி அஞ்சல் (வாட்ஸ்ஆப்) எண்ணுக்கு வரும் ஜூலை 21ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். வெற்றி பெற்றவா்களுக்கு புத்தத் திருவிழாவில் பரிசும், சான்றிதழும் வழங்கப்படும்.

ஒருவா் ஒரு போட்டியில் மட்டுமே கலந்து கொள்ள முடியும். போட்டியில் கலந்து கொள்ளும் மாணவா்களின் பெயா்ப் பட்டியலை பேரா.சா.விஸ்வநாதன், செயலா், வாசகா் பேரவை, எண் 32, எஸ்.எஸ். நகா், புதுக்கோட்டை- 622 001. (கைப்பேசி: 94436 39397) என்ற முகவரிக்கு கல்லூரி முதல்வா்கள் அனுப்பி வைக்க வேண்டும்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments