அறந்தை ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
அறந்தாங்கியில் அறந்தை ரோட்டரி சங்கத்தின் 3-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு ரோட்டரி முன்னாள் தலைவர் சத்துரு சங்கர வேலுச்சாமி தலைமை தாங்கினார். இதையடுத்து, புதிய நிர்வாகிகளாக ரோட்டரி மெய்யப்பன் தலைவராகவும், செயலாளராக கோவிந்தராஜ், பொருளாளராக கோபிநாத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு வருங்கால மாவட்ட ஆளுநர் ரோட்டரி கார்த்திக், துணை ஆளுநர் ரோட்டரி பழனிவேல், மண்டல ஒருங்கிணைப்பாளர் பீர்சேக் ஆகியோர் பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.

இதையடுத்து, அழியா நிலை வெண்புறா விளையாட்டு கழகத்திற்கு நிதியுதவியும், ஆவணத்தான்கோட்டை அரசு தொடக்கப்பள்ளிக்கு விளையாட்டு உபகரணங்களும், குரும்பூர் வள்ளலார் காப்பகத்திற்கு அரிசி ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்தநிகழ்ச்சியில் முன்னாள் ரோட்டரி சங்க செயலாளர் செல்வகுமார், பொருளாளர் கோவிந்தராஜ், பட்டய தலைவர் முரளிதரன், சங்க ஆலோசகர் ராசி மூர்த்தி மற்றும் முன்னாள் தலைவர்களும், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். விழா முடிவில் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments