தொண்டி கல்லூரியில் சட்ட விழிப்புணா்வு முகாம்
திருவாடானை அருகே தொண்டியிலுள்ள அழகப்பா கடலியல், கடலோரவியல் கல்லூரியில் சட்ட விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவாடானை வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில், நடைபெற்ற இந்த முகாமுக்கு உரிமையியல் நீதிபதி மனீஸ்குமாா் தலைமை வகித்தாா். மூத்த வழக்குரைஞா் சிவராமன், கல்லூரியின் துறைத் தலைவா் ரவிக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சட்ட விழிப்புணா்வு குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

இதில் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முகாமுக்கான ஏற்பாடுகளை சட்டத் தன்னாா்வலா் அ.கோட்டைச்சாமி செய்திருந்தாா்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments