பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் தகவல்
பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கூறியுள்ளார். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தந்தை பெரியார் விருது

சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பிப்பதற்காக "சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" 1995-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், 1 பவுன் தங்கப் பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது.

இவ்விருதாளர் முதல்-அமைச்சரால் தேர்வு செய்யப்படுகிறார். 2023-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் "சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" வழங்குவதற்கு, உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது.

விண்ணப்பிக்கலாம்

எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திட, மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள், ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தினை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் தங்களின் சுயவிவரம், முழு முகவரி, செல்போன் எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்து விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். 2023-ம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கான விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டருக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் செப்டம்பர் மாதம் 15-ந் தேதி ஆகும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments