புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் அருகே புதுக்குடி கிராமத்தில் தி.மு.க. இளைஞரணி சார்பாக பாய்மர படகு போட்டி நடைபெற்றது. போட்டியை மணமேல்குடி ஒன்றிய பெருந்தலைவர் பரணி கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். 3 நாட்டிக்கல் மைல் தூரம் நிர்ணயிக்கப்பட்ட இந்த போட்டியில் ராமநாதபுரம், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதியிலிருந்து சுமார் 20 படகுகள் கலந்து கொண்டன. தொடர்ந்து போட்டியில் கலந்து கொண்ட படகுகள் பந்தய தூரத்தை நோக்கி சீறிப்பாய்ந்து சென்று வெற்றி பெற்றன. போட்டியில் முதல் பரிசு ரூ.50 ஆயிரத்தை ராமநாதபுரம் மாவட்டம் நம்புதலை சேர்ந்த படகும், 2-வது பரிசு ரூ.40 ஆயிரத்தை ராமநாதபுரம் மாவட்டம் மோர் பண்ணை பகுதியை சேர்ந்த படகும், 3-ம் பரிசு ரூ.30 ஆயிரத்தை தொண்டி புதுக்குடியை சேர்ந்த படகும், 4-ம் பரிசு ரூ.20 ஆயிரத்தை தொண்டி புதுக்குடியை சேர்ந்த படகும், 5-ம் பரிசு ரூ.10 ஆயிரத்தை தொண்டி புதுக்குடியை சேர்ந்த படகும் தட்டிச்சென்றன. இதையடுத்து வெற்றிபெற்ற படகுகளின் உரிமையாளர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது. படகு போட்டியை காண உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து கண்டுகளித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.