மணமேல்குடி ஒன்றியத்தில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான வட்டார அளவிலான குழு கூட்டம்




மணமேல்குடி ஒன்றியத்தில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான வட்டார அளவிலான குழு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் தொடக்கநிலை மதிப்பிற்குரிய திரு சண்முகம் அவர்கள் தலைமையில் தொடங்கியது.

 மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர்கள்  திரு. செழியன் மற்றும் திருமதி இந்திராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் அனைவரையும் வரவேற்று பேசினார்.

இக்கூட்டத்தில் ஒவ்வொரு மாதத்தின் முதல் திங்கள் கிழமை அன்று காலை இறைவணக்கக் கூட்டத்தில்  வேற்றுமையை ஒழிப்போம் என்ற உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும்

 அதேபோல் வட்டார அளவில் ஒவ்வொரு மாதத்தின் மூன்றாவது வியாழக்கிழமை அன்று மூன்று மணி அளவில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான திட்டங்களை குறித்து வட்டார அளவில் குழு கூட்டம் போட வேண்டும் என்றும், தேசிய அடையாள அட்டையினை அனைத்து மாணவர்களுக்கும் பதிவு செய்ய வேண்டும் என்றும், எண்ணும் எழுத்தும்  ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற புத்தகங்களை  பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், பெண் குழந்தைகளுக்கான ஊக்கத்தொகை வழங்கப்படுவதினை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும், ஒவ்வொரு மாற்றுத் திறன் கொண்ட மாணவர்களுக்கும் உடல்நலம் மற்றும் மனநலம் சார்ந்த கேள்விகளுக்கு சிறப்பாசிரியர்கள் வாயிலாக பதிவு செய்ய வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

இக்கூட்டத்தில் கூட்டப்பொருளை சிறப்பாசிரியர் திருமதி மணிமேகலை வாசித்துக் காட்டினார் ஆசிரியர் பயிற்றுநர் திரு முத்துராமன் நன்றி கூறினார். 

இக்கூட்டத்தில் ஆசிரியர் பயிற்றுநர்கள் வேல்சாமி மற்றும் அங்கையற்கண்ணி, இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் திரு கண்னண், சிறப்பாசிரியர்கள் கோவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.













எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments