மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கிருஷ்ணாஜிபட்டினத்தில் விமன் இந்தியா மூவ்மெண்ட்(WIM) கண்டன ஆர்ப்பாட்டம்!

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கிருஷ்ணாஜிபட்டினத்தில் விமன் இந்தியா மூவ்மெண்ட்(WIM) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மணிப்பூரில் பெண்களுக்கு நிகழும் பாலியல் தொல்லைகளை தடுத்து நிறுத்திடு, குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வழங்கிடு என்ற கோரிக்கையை வலியுறுத்தி விமன் இந்தியா மூவ்மெண்ட் மாநிலம் தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக WIM புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பாக கிருஷ்ணாஜிபட்டினத்தில் நேற்று 22/07/2024 மாலை 5.00 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சியின் மாநில செயலாளர் A.அபுபக்கர் சித்திக் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

இதில் அனைத்து சமுதாய பொதுமக்களும், சமூக ஆர்வளர்களும், கட்சி பிரதிநிதிகளும் திரளாக கலந்து கொண்டு மணிப்பூர் மக்களின் துயரில் பங்கெடுத்து கண்டணத்தை பதிவு செய்தனர்.

வெளியீடு,
சமூக ஊடக அணி,
SDPI கட்சி,
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments