திருச்சி மாவட்டம் தென்னூர் அனார் பாக் தர்காவை இடித்ததை கண்டித்து நாம் தமிழர் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட பொதுக்கூட்டம்!திருச்சி மாவட்டம் தென்னூர் அனார் பாக் தர்காவை இடித்ததை கண்டித்து  நாம் தமிழர் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

திருச்சி மாவட்டம் தென்னூர் அனார் பாக் தர்காவை இடித்த சமூக விரோதிகள் மீது சட்டபடியான நடவடிக்கை எடுக்கவும், இடிக்கப்பட்ட தர்காவை புனரமைப்பு செய்யவும், அனைத்து மத வழிபாட்டு தளங்களை பாதுகாக்க தமிழக அரசை வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட பொதுக்கூட்டம் இன்று 23.07.2023 ஞாயிற்றுக்கிழமை, திருச்சி ராமகிருஸ்ணா பாலம் அருகில் மாலை 5 மணியளவில் மண்டல ஒருங்கினைப்பாளர் இரா.பிரபு, மாநகர மாவட்ட தலைவர் மு.அப்துல்லா அப்துல்லாசா, மாநகர மாவட்டச் செயலாளர் த.பிரபு தனபாலன் தலைமையில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஹுமாயூன் கபீர் கல்வியாளர், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன், மாநில கொள்கைபரப்புச் செயலாளர் துருவன் செல்வமணி, மாநில கொள்கைபரப்புச் செயலாளர் அசுரன் சரவணன், மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அனீஸ் பாத்திமா ஆகியோர் கண்டன உரை நிகழ்த்த உள்ளனர்.

பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக பங்கேற்குமாறு கேட்டுகொள்கிறோம்.

தொடர்புக்கு: 88880 11111, 63741 44126, 99430 79876

தகவல்: முகமது இபுறாஹீம், மீமிசல்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments