பட்டுக்கோட்டை - மீமிசல் - தொண்டி - இராமநாதபுரம் இராமநாதபுரம் - தொண்டி - மீமிசல் - பட்டுக்கோட்டை இராமநாதபுரம் செல்லும் & இராமநாதபுரத்தில் இருந்து புறப்படும் பயணிகள் கவனத்திற்கு






ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் விரிவாக்க பணி காரணமாக தற்காலிக பேருந்து நிலையம் அமைத்து உள்ளார்கள் 

பழைய பேருந்து நிலையம்

இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் இயங்கி வந்த  வெளியூர் பேருந்துகள் 20.07.2022 முதல்‌ இராமநாதபுரம் ரயில்வே நிலையம் எதிரே உள்ள பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என தெருவிக்கபபட்டுள்ளது 

அந்த வகையில் இராமநாதபுரம் - தொண்டி - மீமிசல் - பட்டுக்கோட்டை வழித்தடம் பேருந்துகள் இராமநாதபுரம் பழைய பேருந்து நிலையத்தில் புறப்படுகிறது 

இராமநாதபுரத்தில் இருந்து
தொண்டி மீமிசல் வழியாக   

அறந்தாங்கி,  பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், கும்பகோணம், வேதாரண்யம், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், நாகூர் சிதம்பரம், செல்லும் அனைத்து பேருந்துகளும் இராமநாதபுரம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் 

இராமநாதபுரம் புதிய பேருந்து - இராமநாதபுரம் பழைய பேருந்து நிலையம்..




இராமநாதபுரம் புதிய பேருந்தில் இருந்த இராமநாதபுரம் பழைய பேருந்து நிலையம் வெறும் 600 மீட்டர் மட்டுமே..

உதாரணமாக: இராமநாதபுரத்தில் இருந்து மீமிசல் வர வேண்டும் என்றால் 
பழைய பேருந்து நிலையம் சென்று ஏற வேண்டும்.

ஆனால் புதிய பேருந்து நிலையம் வெளியே செல்லும் பிரதான சாலை வழியாக தான் பேருந்து செல்லும்  அங்கு பேருந்து நின்றால் அங்கிருந்து ஏறலாம், ஆனால் உட்கார இடம் கிடைக்குமா என்றால் பேருந்து கூடத்தை பொறுத்து இருக்கும்...

இல்லையெனில் வெறும் 600 மீட்டர் தான் பழைய பேருந்து நிலையம் அங்கிருந்து சென்று ஏறலாம்..

மீமிசலில் இருந்து இராமநாதபுரம் செல்லும் போது புதிய பேருந்து நிலையம் பிரதான சாலையில் இறங்கி கொள்ளலாம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments