புதுக்கோட்டையில் 6-வது புத்தக திருவிழா இன்று தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது
புதுக்கோட்டையில் 6-வது புத்தக திருவிழா இன்று முதல் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.

சிறப்பு சலுகை

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் 6-வது புத்தக திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்கி ஆகஸ்டு 6-ந் தேதி வரை புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடைபெறுகிறது. தமிழ்நாட்டின் முன்னணி பதிப்பகங்கள் மூலம் 120 அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் வாசகர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

புத்தக திருவிழாவை முன்னிட்டு அனைத்து அரங்குகளிலும் வாசகர்களுக்கு சிறப்பு சலுகைகளில் புத்தகங்கள் விற்கப்பட உள்ளன. பள்ளி மாணவர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. மாணவர்களுக்கு குறிப்பிட்ட பதிப்பகங்களில் கூடுதல் சலுகைகள் வழங்கப்பட உள்ளன.

தொடக்க விழா

இன்று காலை 10 மணியளவில் நடைபெறும் தொடக்க விழாவிற்கு மாவட்ட கலெக்டரும், புத்தக திருவிழா குழு தலைவருமான மெர்சி ரம்யா தலைமை தாங்குகிறார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே முன்னிலை வகிக்கிறார். புத்தக திருவிழாவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைக்கிறார்.

தொடர்ந்து மாலையில் நடைபெறும் விழாவில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், அறிவியல் இயக்க மாநில தலைவர் தினகரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றளர். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், அறிவியல் இயக்க பொறுப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

புத்தக திருவிழா இன்று தொடங்கவுள்ளதையொட்டி மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா நேற்று அரங்குகள் அமைக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தாசில்தார் விஜயலட்சுமி மற்றும் புத்தக திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் உடனிருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments