மணமேல்குடி பகுதியில் அரசு பள்ளிகளுக்கு இருக்கைகள் வழங்கிய மாவட்ட கவுன்சிலர்!மணமேல்குடி பகுதியிலுள்ள அரசு பள்ளிகளுக்கு மாவட்ட கவுன்சிலர் நிதியிலிருந்து இருக்கைகள் வழங்கப்பட்டது. 

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியிலுள்ள பெரும்பாலான மற்றும் நடுநிலைப் பள்ளகளில் மாணவர்கள் தரையில் அமர்ந்து படித்து வருகின்றனர்.

மாணவர்களின் போக்கவும், மாணவர்களின் கல்வித்திறனை அதிகப்படுத்தவும் மாவட்ட கவுன்சிலர் நிதியிலிருந்து டெஸ்க் பெஞ்ச் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி முதற்கட்டமாக காரக்கோட்டை ஒன்றிய துவக்கப்பள்ளி, கிருஷ்ணாஜிப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, இடையாத்திமங்களம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பானாவயல் துவக்கப்பள்ளி, மும்பாலை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, வடக்கம்மாப்பட்டினம் துவக்கப்பள்ளி மற்றும் புதுக்குடி ஒன்றிய துவக்கப்  பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு இருக்கைகள் வழங்கப்பட்டது.

மாவட்ட கவுன்சிலர் நஜிமுதீன் பள்ளிகளுக்கு டெஸ்க், பெஞ்ச்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள். மாணவர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் பள்ளி மாணவர்களின் நடன நிகழ்ச்சியும் நடந்தது. இதில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments