புதுக்கோட்டை மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் இதுவரை 2 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு




புதுக்கோட்டை மாவட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 2 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பங்கள் பதிவு முகாம் நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் முதற்கட்டமாக புதுக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி, கந்தர்வகோட்டை, இலுப்பூர், மணமேல்குடி, பொன்னமராவதி ஆகிய 7 தாலுகாவில் விண்ணப்ப பதிவு முகாம்கள் கடந்த 24-ந் தேதி முதல் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. மொத்தம் 3 லட்சத்து 6 ஆயிரத்து 454 குடும்ப அட்டைதாரர்களுக்கு விண்ணப்பம் வினியோகிக்கப்பட்டுள்ளது. இதில் நேற்று காலை வரை 2 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாம்கள் வருகிற 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

2-ம் கட்டமாக...

இதைத்தொடர்ந்து 2-ம் கட்டமாக விண்ணப்ப பதிவு முகாம்கள் வருகிற 5-ந் தேதி தொடங்கி 16-ந் தேதி வரை நடைபெற உள்ளது. 2-ம் கட்டம் திருமயம், கறம்பக்குடி, குளத்தூர், விராலிமலை, ஆவுடையார்கோவில் ஆகிய 5 தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் விண்ணப்பங்கள், டோக்கன் வினியோகிக்கப்பட்டு விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments