கட்டுமாவடி மீன் மார்க்கெட் சாலையில் இருபுறமும் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல்!



கட்டுமாவடியில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் பெரிய மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு இராமநாதபுரம், பாம்பன், தூத்துக்குடி, நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் இருந்து மீன்களை விற்பதற்கும், வாங்குவதற்கும்  அதிகமானோர் தினமும் வாகனங்களில் வந்து செல்கின்றனர். அதே போன்று புதுக்கோட்டை ,தஞ்சாவூர், சிவகங்கை மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அதிகமானோர் தினமும் வாகனங்களில் வந்து செல்கின்றனர். 

இங்கு வரக்கூடிய வாகனங்கள்  மீன் மார்க்கெட் அருகே அறந்தாங்கி சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் இந்த சாலையின் வழியே செல்லக்கூடிய இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. குறிப்பாக அதிகாலை 4 மணி முதல் காலை 10 மணி வரை மீன் மார்க்கெட் பரபரப்புடன் காணப்படுவதால் இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் இந்த வழியாக செல்லும் ஆம்புலன்ஸ்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. மேலும் பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கும் காலதாமதம் ஏற்படுகிறது. 

எனவே இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments