மணமேல்குடியில் மாட்டு வண்டி எல்கை பந்தயம்






மணமேல்குடியில் மாட்டு வண்டி எல்கை பந்தயம்  வீரன் அழகு முத்துகோன் குருபூஜையை முன்னிட்டு நடைபெற்றது 
 
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் ஆண்டுதோறும் வீரன் அழகுமுத்துக்கோன் குருபூஜை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தையம் நடைபெறுவது வழக்கம் இந்தாண்டு நடைபெற்ற மாட்டுவண்டி எல்கை பந்தையத்தில் புதுக்கோட்டை, தஞ்சை, நாகை,சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 40 ஜோடி மாடுகள் போட்டியில் பங்கேற்றன. 2 பிரிவுகளாக நடைபெற்ற பந்தையத்தில் பெரிய மாடு பிரிவில் 11 ஜோடி மாடுகளும், நடு மாடு பிரிவில் 29 ஜோடி மாடுகளும் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. பந்தையத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடுகளுக்கு 1 லட்சம் மதிப்பிலான கோப்பைகள் மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது.

 மேலும் மாடுகளை ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப்பரிசு மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. சாலையின் இருபுறத்திலும் ரசிகர்கள் திரண்டிருந்து பந்தையத்தை கண்டு ரசித்தனர். பந்தயம் நடைபெற்ற பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments