மயிலாடுதுறை - திருவாரூர் & திருவாரூர் - காரைக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் ஆகஸ்ட் 14 முதல் நேரம் மாற்றம்

மயிலாடுதுறை - திருவாரூர் & திருவாரூர் - காரைக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் ஆகஸ்ட் 14 முதல் நேரம் மாற்றத்தால் 
இனி வாரத்தில் 6 நாட்கள் மட்டும் மயிலாடுதுறையில்  இருந்து ஒரே ரயிலில் பயணித்து வெறும் 4 மணி நேரத்தில் காரைக்குடி செல்லலாம்.

மயிலாடுதுறை - திருவாரூர் & திருவாரூர் - காரைக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் ஆகஸ்ட் 14 முதல் நேரம் மாற்றம் நடைமுறைக்கு வருகிறது 

மயிலாடுதுறை - திருவாரூர் - காரைக்குடி 

06541 மயிலாடுதுறை - திருவாரூர் (தினசரி)

வண்டி எண்-06541 தினசரி மயிலாடுதுறையில் இருந்து காலை 07.25 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில், காலை. 08.20-க்கு திருவாரூர் சென்றடையும்

06197 திருவாரூர்  - காரைக்குடி (வாரத்தில் 6 நாட்கள் ஞாயிறு தவிர)

வண்டி எண்-06197 வாரத்தில் 6 நாட்கள் ஞாயிறு தவிர திருவாரூரில் காலை 08:25 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில், பிற்பகல் காலை.11.45-க்கு காரைக்குடி சென்றடையும்.

காரைக்குடி - திருவாரூர் - மயிலாடுதுறை 

06198 காரைக்குடி - திருவாரூர் (வாரத்தில் 6 நாட்கள் ஞாயிறு தவிர)

பின்னர்,  அங்கிருந்து வாரந்திர 6 நாட்கள் ஞாயிறு தவிர காரைக்குடியில் இருந்து மாலை 04:00 மணிக்கு புறப்பட்டு இரவு 07.30 மணிக்கு திருவாரூர் வந்து சேரும்.

06688 திருவாரூர் - மயிலாடுதுறை  (தினசரி)

வண்டி எண்-06688 தினசரி திருவாரூரில் இருந்து இரவு 08.15 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில், இரவு 09.15-க்கு மயிலாடுதுறை சென்றடையும்

எங்கே எங்கே நின்று செல்லும்?

மயிலாடுதுறை,, 
பேரளம், 
பூந்தோட்டம், 
நன்னிலம், 
திருவாரூர், 
மாங்குடி, 
மாவூர் ரோடு, 
திருநெல்லிக்காவல், 
அம்மனூர், 
ஆலத்தம்பாடி, 
மணலி, 
திருத்துறைப்பூண்டி, 
தில்லைவிளக்கம், 
முத்துப்பேட்டை, 
அதிராம்பட்டினம், 
பட்டுக்கோட்டை,  
ஒட்டாங்காடு, 
பேராவூரணி, 
ஆயிங்குடி,
அறந்தாங்கி,  
வளரமாணிக்கம், 
பெரியகோட்டை, 
கண்டனூர் புதுவயல் 
காரைக்குடி 

ஆகிய ரயில்நிலையங்களில் நின்று செல்லும்..

முக்கிய குறிப்புகள் 

* மயிலாடுதுறையில் இருந்து காலை புறப்பட்ட திருவாரூர் வரும் ரயில் தான் திருவாரூர் வந்த பிறகு அப்படியே காரைக்குடி செல்லும் 

* எனவே ஒரே ரயிலில் மயிலாடுதுறை பேரளம் பூந்தோட்டம் நன்னிலம் மக்கள் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை பேராவூரணி அறந்தாங்கி காரைக்குடி செல்லலாம் 

* திரும்ப காரைக்குடியில் இருந்து மாலை திருவாரூர் வரும் ரயில் 07.30 மணிக்குள் வரும்.. திருவாரூரில் 45 நிமிடங்கள் காத்து இருக்க வேண்டும்..

* பக்கத்தில் உள்ள நடைமேடையில் திருவாரூர் -மயிலாடுதுறை ரயில் நிற்கும் நடைமேடையில் அறிவிப்பும் செய்வார்கள்
அதை பின்பற்றிவும்

* காரைக்குடி - திருவாரூர் ரயிலில் வந்தவர்கள் அந்த ரயிலில் மாறி நன்னிலம் பூந்தோட்டம் பேரளம் தோட்டம் மயிலாடுதுறை செல்லலாம் 

* இரண்டு ரயில்களில் பயணம் செய்ய நேரடியாக ஒரே டிக்கெட் எடுக்கலாம் இதன் மூலம் 20 ரூபாய் மிச்சம் ஆகும்

* உதாரணமாக காரைக்குடியில் இருந்து மயிலாடுதுறை செல்ல வேண்டும், என்றால் காரைக்குடியிலே மயிலாடுதுறை வழி: திருவாரூர் எக்ஸ்பிரஸ் கட்டணம் என கேட்டு வாங்கலாம்.. நேரடியாக டிக்கெட் எடுத்தால் திருவாரூரில்  மயிலாடுதுறை ரயிலுக்கு  டிக்கெட் எடுக்க வேண்டியதில்லை..

PC Credit : Surya 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments