தொண்டியில் முக்கிய மும்முனை சந்திப்பு சாலைகளில் விபத்தினை தடுப்பதற்கு ரவுண்டானா அமைக்க மக்கள் வலியுறுத்தல்




தொண்டியில் முக்கிய  மும்முனை சந்திப்பு சாலைகளில்  விபத்தினை தடுப்பதற்கு ரவுண்டானா அமைக்க மக்கள் வலியுறுத்தல்

ராம நாதபுரம் மாவட்டத் தில் தொண்டி வளர்ந்து வரும் நகர் பகுதியாக உள்ளது. வளர்ச்சிக்கு ஏற்றார் போல் போக்குவ ரத்தும் அதிகரித்துள்ளது. தொண்டி பழைய பஸ் ஸ்டாண்ட் செக்போஸ்ட் பகுதி மற்றும் வட்டாணம் ரோடு ஆகிய மும்முனை சந்திப்பு உள்ள இடங்கள் எப்போதும் பரபரப்புடன் காணப்படும்.மும்முனை சந்திப்பு என்பதால் எதிரே வரும் வாகனம் தெரியா மல் அடிக்கடி விபத்து நடக்கிறது. மேலும் இரவு நேரங்களில் இப்பகுதிகள் இருட்டாக இருப்பதாலும், கால்நடைகள் படுத்துக் கொள்வதாலும் விபத்து நடக்கிறது. அதனால் இப் பகுதிகளில் ரவுண்டானா அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமுமுக மாநில செய லாளர் சாதிக் பாட்ஷா கூறியது, தொண்டி. - மதுரை ராமேஸ்வரம் - மும்முனை சந்திப்பான பழைய பஸ் ஸ்டாண்ட் செக்போஸ்ட் பகுதியும், வட்டாணம் ரோடு - பட் டுக்கோட்டை - கடற்கரை சாலை சந்திப்பான வட் டாணம் ரோடு பகுதியும் எப்போதும் போக்குவ ரத்து அதிகரித்து காணப்ப டும்.இரண்டு இடமும் மும்முனை சந்திப்பாக இருப்பதால் எதிரே வரும் வாகனம் தெரியாமல் மோதி அடிக்கடி விபத்து நடக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு செக்போஸ்ட் பகுதியில் ரவுண்டானா அமைக்க பேரூராட்சியில் தீர்மா னம் நிறைவேற்றப்பட் டது குறிப்பிடத்தக்கது என்றார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments