திருவாரூர் - காரைக்குடி & திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி ரயில் பாதை மின்மயமாக்கல் பணிகளுக்கான திருத்தப்பட்ட திட்ட மதிப்பீடு அனுமதியுடன் பணி ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.




திருவாரூர் - காரைக்குடி & திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி ரயில் பாதை மின்மயமாக்கல் பணிகளுக்கான திருத்தப்பட்ட திட்ட மதிப்பீடு  அனுமதியுடன் பணி ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது‌. ‌

ரயில் பாதை

நாடு முழுவதும் உள்ள ரெயில் பாதையை மின்மயமாக்குவதை தங்களின் கனவுத்திட்டமாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதன்படி நாட்டில் டீசல் ரெயில்களை மின்ரெயில்களாக மாற்றி இயக்கப்பட்டதன் மூலம் மாசு இல்லா பசுமை சூழலுக்கு வழிவகுத்ததுடன் ரெயில்வே நிர்வாகத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகி உள்ளது. இதனால் அனைத்து ரெயில்பாதைகளையும் மின்ரெயில்பாதைகளாக மாற்றப்பட்டு வருகிறது. 

திருவாரூர் -  காரைக்குடி  

இந்த திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வே திருச்சி கோட்டத்தில் திருவாரூர் - காரைக்கால் இடையேயான 148 கிலோ மீட்டர் தொலைவிக்கு  மின்மயமாக்கல் பணிகள் மேற்கொள்ள. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்காக 2023-24 நிதியாண்டில் ரயில்வே மின்மயமாக்கல் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் இருந்து ரூபாய் 143. 07 கோடிகள்  (ரூபாய் நூற்று நாற்பத்து மூன்று கோடியே ஏழு லட்சம் மட்டும்) அனுமதிக்கப்பட்டு நிர்வாக ஒப்புதல் அளித்துள்ளது.

திருவாரூர் - காரைக்குடி மற்றும் திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி ரயில்பாதை மின்மயமாக்கல் பணிகளுக்கான திருத்தப்பட்ட திட்ட மதிப்பீடு  அனுமதியுடன் பணி ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

விரைவில் மின்மயமாக்கல் பணிகள் துவங்கும்

ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு எண். OHE-CN-DYCEE-23-24-08-191

மேதகு இந்திய குடியரசு தலைவரின் சார்பிலும் அவருக்காகவும் துணை தலைமை மின்சார பொறியாளர் ரயில்வே, சென்னை எழும்பூர் அவர்கள், பின்வரும் பணிகளுக்காக மின்னணு வரவேற்கிறார். ஒப்பந்தப்புள்ளிகளை

தெற்கு ரயில்வேயின் திருச்சிராப்பள்ளி கோட்டத்தின் 

திருவாரூர் - பட்டுக்கோட்டை -
காரைக்குடி மற்றும் திருத்துறைப்பூண்டி அகஸ்தியம்பள்ளி பிரிவுக்காக,

மேல்நிலை சாதனங்களுக்காக (Overhead OHE) வடிவமைப்புகள் மற்றும் வரைபடங்களை தயாரித்தல்

ஒப்பந்தப்புள்ளி மதிப்பு: ரூ 27,70,741.46

ஒப்பந்தப்புள்ளி மூடப்படும் தேதியும் நேரமும் : 08.09.2023 அன்று 15.00 மணி

தற்போதைய நிலவரப்படி திருவாரூர் - காரைக்குடி  வழித்தடத்தில் 4 ஜோடிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன

* திருவாரூர் - காரைக்குடி - திருவாரூர் முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் (வாரத்தில் 6 நாட்கள்)

* எர்ணாகுளம் - வேளாங்கண்ணி - எர்ணாகுளம் வாரந்திர சிறப்பு ரயில் (வாரத்தில் 1 நாட்கள்)

* செகந்திராபாத் - இராமநாதபுரம் - செகந்திராபாத் வாரந்திர சிறப்பு ரயில் (வாரத்தில் 1 நாட்கள்)

* தாம்பரம் - செங்கோட்டை - தாம்பரம் (வாரத்தில் 3 நாட்கள்)

தற்போதைய நிலவரப்படி திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி  வழித்தடத்தில் 3 ஜோடிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன..

திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி  (காலை - வாரத்தில் 5 நாட்கள்)

திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி (காலை - வாரத்தில் 5 நாட்கள்)

திருத்துறைப்பூண்டி - திருச்சி (வாரத்தில் ஒரு நாள்)
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments