காவல் துறையில் பயன்படுத்திய வாகனங்கள் ஆக. 22 இல் ஏலம்புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 7 நான்கு சக்கர வாகனங்கள் வரும் ஆக. 22ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆயுதப்படை வளாகத்தில் வைத்து பொது ஏலத்தில் விடப்படும்.

இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே கூறியது:

ஏலம் எடுக்க விரும்புவோா் வரும் 21ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களைப் பாா்வையிட்டு கொள்ளலாம்.

வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவோா் 21ஆம் தேதி ஆயுதப்படை வாகனப் பிரிவு அலுவலகத்தில் ரூ. 2 ஆயிரம் முன்பணம் செலுத்தி தங்களது பெயரைப் பதிந்து டோக்கன் பெற்று கொள்ள வேண்டும். டோக்கன் பெற்றவா்கள் மட்டுமே ஏலம் எடுக்கலாம்.

ஏலம் எடுப்போருக்கு அதற்கான ஜிஎஸ்டி கணக்கு இருக்க வேண்டும். ஏலம் எடுத்த உடன் முழு தொகையையும் அரசுக்கு அன்றே ரொக்கமாக செலுத்தி வாகனத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments