எர்ணாகுளம் - வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரயில் வாரம் இருமுறை (BI - Weekly) ரயிலாக செப்டம்பர் 25 முதல் இயக்கம்



காரைக்குடி அறந்தாங்கி  பட்டுக்கோட்டை  திருத்துறைப்பூண்டி திருவாரூர் வழியாக  எர்ணாகுளம் -  வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரயில் வாரம் இருமுறை (BI - Weekly) ரயிலாக செப்டம்பர் 25 முதல் இயக்கப்படுகிறது 

வண்டி எண் :  06035/36 வாரம் ஒருமுறை சிறப்பு ரயில் (Weekly)

26-08-2023 2-09-2023 9-09-2023 16-09-2023 23-09-2023 ஆகிய ஐந்து நாட்களில் சனிக்கிழமைகளில் வண்டி எண் 06035 /06036 எர்ணாகுளம் - வேளாங்கண்ணி - எர்ணாகுளம்  வாராந்திர சிறப்பு ரயிலாகவும் இயங்கும்.




வண்டி எண் : 16361/62 வாரம் ஒருமுறை நிரந்தர ரயில் (Weekly)

வண்டி எண் 16361/16362 எர்ணாகுளம் - வேளாங்கண்ணி  - எர்ணாகுளம் விரைவு ர‌யி‌ல் நிரந்தர வாரமிருமுறை சேவையாக இயக்கப்படுவதற்கு  முன்பாக எதிர்வரும் 28-08-2023, 04-09-2023,11-09-2023 18-09-2023 ஆகிய நான்கு திங்கள்கிழமைகளில்  வாராந்திர விரைவு ர‌யி‌ல் சேவைகளாக இயங்கும். 




வண்டி எண் : 16361/62 வாரம் இருமுறை நிரந்தர ரயில் (BI - Weekly)

வண்டி எண் 16361/16362 எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாரமிருமுறை விரைவு ர‌யி‌ல் 25-09-2023 முதல் வழக்கமான நிரந்தர வாரமிருமுறை விரைவு ர‌யி‌ல் சேவைகளாக இயங்கிட உள்ளது.




எர்ணாகுளம் - வேளாங்கண்ணி (வண்டி எண்:16361) 

இந்த  எக்ஸ்பிரஸ் ரெயில் சனிக்கிழமை & திங்கட்கிழமை பகல் 1.00 மணிக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை & செவ்வாய்க்கிழமை காலை 5.45 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.  

வேளாங்கண்ணி- எர்ணாகுளம் (வண்டி எண் : 16312)

மறுமார்க்கத்தில் இந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஞாயிற்றுக்கிழமை & செவ்வாய்க்கிழமை மாலை 6.40 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமை & புதன்கிழமை பகல் 11.40 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். 

இரண்டாவது நிரந்தர ரயில்  

வண்டி எண் 16361/16362 எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாரமிருமுறை விரைவு ர‌யி‌ல் திருவாரூர் -  காரைக்குடி தடத்தில் இயக்கப்படும் இரண்டாவது நிரந்தர விரைவு ர‌யி‌ல் சேவையாகும்.

எங்கெங்கு நின்று செல்லும்?

எர்ணாகுளம் 
கோட்டையம்,
செங்கனாசேரி, 
திர்வல்லா, 
செங்கனூர், 
காயங்குளம்,  
கொல்லம், 
கொட்டாரகர, 
புணலூர், 
செங்கோட்டை,
இராஜபாளையம், 
சிவகாசி, 
விருதுநகர், 
அருப்புக்கோட்டை, 
காரைக்குடி, 
அறந்தாங்கி, 
பட்டுக்கோட்டை, 
திருத்துறைப்பூண்டி, 
திருவாரூர், 
நாகப்பட்டினம்
வேளாங்கண்ணி 

ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்டிகளின் எண்ணிக்கை:
ஸ்லீப்பர்: 7
3 ஏ/சி: 2
2 ஏ/சி:1
பொது: 4
என மொத்தம் 14 பெட்டிகளோடு இயக்கப்படும்.

வாரம் இருமுறை ரயிலுக்கான‌ 
முன்பதிவு  27-08-2023 ஞாயிற்றுக்கிழமை காலை 8‌ மணி முதல்  தொடங்கி நடைபெற்று வருகிறது 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments