மானாமதுரை,திருச்சி, விழுப்புரம் செங்கல்பட்டு சென்னை எழும்பூர், விஜயாவாடா நாக்பூர், போபால், வழியாக செல்லும் இராமேஸ்வரம் - அஜ்மீர் வாரந்திர ஹம்சாபர் ரயிலை ஜெய்ப்பூர் வழியாக ஃபெரோஸ்பூர் வரை நீட்டிக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது
இராமேஸ்வரத்தில் இருந்து இராஜஸ்தான் மாநிலம் அஜீமீர் வரை வாரந்திர ஹம்சாபர் ரயில் (வண்டிஎண் 20973/20974)இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயில் மூலம் , தமிழ்நாடு ஆந்திரா மஹாராஷ்டிரா மத்திய பிரதேசம் ராஜஸ்தான் மாநிலம் மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்த ரயில் ஒவ்வொரு வாரமும் இராமேஸ்வரத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமை இரவு 10.55 மணிக்கு அஜ்மீர் வந்தடையும்.
மறுமார்க்கமாக அஜ்மீரில் இருந்து ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு
8.20 மணிக்கு புறப்படும் ரயில் திங்கட்கிழமை இரவு 9.00 மணிக்கு இராமேஸ்வரம் சென்றடையும்.
இந்த ரயில் தமிழகத்தில் மானாமதுரை திருச்சி அரியலூர் விழுப்புரம் செங்கல்பட்டு சென்னை எழும்பூர், நிறுத்துங்களுடன் வழியாக இயங்கி வருகிறது.
இந்நிலையில் தான் இராமேஸ்வரம் - அஜ்மீர் வாரந்திர ஹம்சாபர் ரயிலை ஜெய்ப்பூர் வழியாக ஃபெரோஸ்பூர் வரை நீட்டிப்பு செய்ய ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கி உள்ளது.
மேலும் இந்த ரயில் சேவை நீட்டிப்பு குறித்து ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது
PC Credit : Siva Prakash
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.