கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புன்னகை அறக்கட்டளை சார்பாக மூன்று லட்சம் பனை விதை சேகரிக்கும் பணியை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST. ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்புதுக்கோட்டை மாவட்டம் , அறந்தாங்கி அடுத்த அமரடக்கி புன்னகை அறக்கட்டளை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை  முன்னிட்டு, சென்னை - முதல் கன்னியாகுமரி வரை 1076 கிலோ மீட்டர்14 கடற்கரை மாவட்டத்தில் தமிழ்நாடுபனைமர தொழிலாளர் நலவாரியம்,நாட்டு நலபணிதிட்டம், கீரின்நீடா, மூன்றுஅமைப்புகளுடன் அமரடக்கி புன்னகை அறக்கட்டளை இணைந்து  புதுக்கோட்டை மாவட்டத்தில் கடற்கரை  ஓரங்களில் பனை விதைகளை நட இருக்கிறனர்

அதன் முதற்கட்டமாக  இன்று  அறந்தாங்கி தொகுதியில் அமரடக்கியில்  பனை விதை வங்கி நிலையத்தை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST. ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார் 


இந்த பண விதை வங்கியில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தானாக முன்வந்து அப்பகுதியில் இருக்கக்கூடிய பனை விதைகளை வழங்கலாம் என கூறினர்

இந்த நிகழ்ச்சியை புன்னகை அறக்கட்டளை நிறுவனர் கலை பிரபு ஏற்பாடு செய்திருந்தார்

இந்த நிகழ்ச்சியில் கிராம பொதுமக்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர் என பலர் கலந்து கொண்டனர்எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments